தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli: கொலஸ்ட்ராலை குறைக்கும் ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள்

Broccoli: கொலஸ்ட்ராலை குறைக்கும் ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள்

I Jayachandran HT Tamil

Mar 30, 2023, 07:21 PM IST

கொலஸ்ட்ராலை குறைக்கும் ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸின் ஒரு வகைதான் ப்ராக்கோலி. மேலைநாட்டு வர்க்கம். இப்போது இந்தியா முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. அதன் ஊட்டச்சத்துகளை உண்ரந்து கொண்டுள்ள்ளதால் மக்களும் ப்ராக்கோலியை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Days : இன்னும் 25 ஆண்டுகளுக்கு கோடைக்காலம் எப்படி இருக்கும்? அண்ணா பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க படாதபாடு படுகிறீர்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Gongura Benefits : பாலியல் நோய்களுக்கு தீர்வு; பார்வை குறைபாட்டை சரிசெய்யும் புளிச்சக்கீரையின் நன்மைகள்!

Benefits of Beetroot Juice : தினமும் ஒரு டம்ளர்; 10 நாள் தொடர்ந்து பருகவேண்டிய சாறு! ரத்த சோகையை விரட்டியடிக்கும்!

பச்சைப் பூக்கோசு என்றும் ப்ராக்கோலி அழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது. அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும். ஒரு ஆரோக்கியமான டயட்டுக்குத் தேவையான காய்கறி எது என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் ப்ராக்கோலியைச் சுட்டிக் காட்டலாம்.

ப்ராக்கோலியில் ஃப்ளாவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன், சியாஸாந்த்தின் போன்ற ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது.

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்

பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், கேம்ப்ஃபெரால் ஆகியவைதான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.

பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது; அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே!

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மன நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்குப் பகைவனாக உள்ளது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும்; தோல் பளபளப்பாகும்.

டாபிக்ஸ்