நரை முடியை துரத்தி; கருகரு தலைமுடி வேண்டுமா? இந்த மூலிகை எண்ணெய் உங்களுக்கு உதவும்!
நரை முடியை துரத்தி, கருகரு தலைமுடி வேண்டுமா? இந்த மூலிகை எண்ணெய் உங்களுக்கு உதவும். எப்படி தயாரிப்பது பாருங்கள்.
இங்கு நீங்களே தயாரிக்கும் எண்ணெய் உங்களுக்கு நீண்ட, கருகரு கூந்தலைக் கொடுக்கும் என்றால், நரையைப் போக்கும் என்றால், அது உங்களுக்கு எத்தனை நல்லது. அதை எப்படி செய்வது எப்படி என்று பாருங்கள். உங்கள் தலைமுடியை விரைவில் வளரச்செய்யும் எண்ணெய், தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் தலைமுடியின் அடர்த்தியையும் அதிகரிக்கும். இந்த மூலிகை எண்ணெயை நீங்கள் பயன்படுத்தினால், இவையனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். இவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தலைமுடியை அதிகரிக்கும். இந்த மூலிகை எண்ணெயை நீங்கள் எளிதாக வீட்டிலே தயாரித்து விடமுடியும். அதற்கு தேவையான பொருட்களை நீங்கள் நாட்டு மருந்து கடைகளிலேயே பெற முடியும். இது மூலிகையின் பல்வேறு குணங்கள் நிறைந்ததாக இருக்கும். இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். எனவே இதை வீட்டிலே தயாரித்து கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்
ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி லிட்டர்
விளக்கெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
நெல்லிக்காய்ப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
செம்பருத்தி பூக்கள் – 6
கரிசலாங்கண்ணிப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
வேம்பு இலைகள் – ஒரு கைப்பிடியளவு
ரோஸ்மேரி எசன்ஷியல் எண்ணெய் – 10 சொட்டுகள்
லாவண்டர் எசன்ஷியல் எண்ணெய் – 10 சொட்டுகள்
அடிப்படை எண்ணெயை தயாரிப்பது எப்படி?
ஒரு சுத்தமான, காய்ந்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். இந்த எண்ணெய்தான் உங்கள் மூலிகை எண்ணெய்க்கு அடிப்படையாகும். இது உங்கள் கூந்தலுக்கு ஆழ்ந்த ஊட்டமளிக்கிறது. மூலிகைகளை நன்றாக ஊறவும் வைக்கிறது.
வெந்தயம்
வெந்தயத்தை கொஞ்சம் உரலில் இடித்து பொடியாக்கிக்கொள்ளவேண்டும். பொடித்து சேர்ப்பதால் வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள் அதில் வெளியேற உதவும். இதையும் அந்த எண்ணெயில் கலக்கவேண்டும்.
கறிவேப்பிலை, வேம்பு
கறிவேப்பிலை மற்றும் வேம்பு இலைகளை நன்றாக அலசிக்கொள்ளவேண்டும். பின்னர் அதை நறுக்கி, எண்ணெயில் சேர்க்கவேண்டும். இந்த இலைகள் உங்கள் தலைமுடியை வலுவாக்கும். உங்கள் தலையில் உள்ள பொடுகை எதிர்த்து போராடும்.
கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காய் பொடி
கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காய்ப் பொடியை அந்த எண்ணெயில் சேர்க்கவேண்டும். நெல்லியில் வைட்மின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். கரிசலாங்கண்ணி, மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. இது தலைமுடி உதிர்வைத் தடுத்து, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
செம்பருத்திப் பூக்கள்
செம்பருத்திப் பூக்களை சிறு துண்டுகளாக்கி, அதை எண்ணெயில் சேர்க்கவேண்டும். செம்பருத்தி பூக்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடி உதிர்வைத் தடுக்கும். இது கூந்தலுக்கு பளபளப்பைத் தரும்.
எண்ணெய்
அடுப்பில் கடாயை வைத்து சூடாக்கி, இந்த எண்ணெய் கலவையை அதில் சேர்த்து குறைவான தீயில் காய்ச்சவேண்டும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இதை நீங்கள் அரை மணிநேரம் வரை காய்ச்சவேண்டும். எண்ணெய் அதிகம் சூடாகக் கூடாது. அதிகம் கொதித்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுவதும் கிடைக்காமல் போய்விடும். காய்ச்சி, ஆறவைக்கவேண்டும்.
வடிகட்டி, சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்
எண்ணெய் ஆறியவுடன் துணியில் சேர்த்து நன்றாக வடித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அதில் உள்ள கெட்டியான உட்பொருட்கள் எண்ணெய் தேய்க்கும்போது இருக்காது. வடித்த எண்ணெயை சுத்தமான பாட்டிலில் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். இப்போது லாவண்டர் மற்றும் ரோஸ்மேரி எசன்சியல் எண்ணெய்களை அதில் சேர்த்து கலந்து வைத்துவிடவேண்டும். இது நல்ல மணத்தை தருவதுடன், தலைமுடியையும் வளர்க்கும். உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை
தினமும் குளிக்கச் செல்லும் முன் தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவேண்டும் அல்லது நல்ல பலன்களைப் பெறுவதற்கு முதல் நாள் இரவு தலையில் தேய்த்து வைத்துவிட்டு, காலையில் தலையை மிருதுவான ஷாம்பூ தேய்த்து குளிக்க நல்ல பலன் கிட்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்