Fatty Liver Disease: மது அருந்தாமல் இருந்தாலும் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படலாம்..எப்படி தெரியுமா? - விபரம் இதோ..!
Sep 25, 2024, 05:14 PM IST
Fatty Liver Disease: கொழுப்பு கல்லீரல் நோய் சில நுட்பமான அறிகுறிகளைக் காட்டுகிறது. அவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Fatty Liver Disease: மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். உண்மையில், கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்தாமல் கூட ஏற்படலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது தற்போது பலரிடம் காணப்படும் பிரச்சனை. இது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் தொடங்குகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் சில நுட்பமான அறிகுறிகளைக் காட்டுகிறது. அவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
கல்லீரல் நோயின் அறிகுறி
செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் சரியாக செயல்படாதபோது, கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைகிறது. அப்போது அந்த கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேரும். வயிற்றைச் சுற்றி கொழுப்புச் சேர்வது கல்லீரல் நோயின் அறிகுறியாகும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் திடீரென எடை அதிகரிப்பு அல்லது அதிக எடை அதிகரிப்பு கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பின் காரணமாக எடை கூடுகிறது. வயிற்றைச் சுற்றி கொழுப்பு திடீரென அதிகரிப்பது உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பருக்கள்
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகள் முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கும். கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு திடீரென பருக்கள் வரும். கல்லீரல் கொழுப்பை உடைக்காதபோது, அதில் உள்ள நச்சுகள் தோல் வழியாக வெளியேற முயற்சிக்கும். பின்னர் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முகப்பரு ஆரம்பித்து சில மாதங்களுக்கு தொடர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
தோலில் புள்ளிகள்
கொழுப்பு கல்லீரல் நோய் , தோல் கருமையாவதோடு , கழுத்து, அக்குள் மற்றும் முழங்கைகள் கடுமையாக கருமையாகிறது. இந்த கருப்பு நிறம் இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக உள்ளது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்புடைய அறிகுறியாகும். மது அருந்தாதவர்களுக்கு இது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகும்.
தோல் நிறம்
உங்கள் கண்கள் மற்றும் தோலின் நிறம் மாறினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தோல் மற்றும் கண்கள் சற்று மஞ்சள் நிறமாக மாறியவுடன் கவனமாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பிரச்சனைக்கான ஆரம்ப எச்சரிக்கை. இரத்த சிவப்பணுக்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பிலிரூபினை கல்லீரல் சரியாக வடிகட்டவில்லை என்றால், தோல் மற்றும் கண்கள் நிறமாற்றம் அடையும். எனவே கண்களில் தோல் நிறம் மாறினால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.
எலும்பு வலி
உங்கள் வலது பக்கத்தில் உள்ள விலா எலும்புக் கூண்டின் கீழ் நீங்கள் தொடர்ந்து அசௌகரியத்தை உணர்ந்தால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் கல்லீரல் அதே பகுதியில் உள்ளது. இந்த வலி கல்லீரல் அழற்சியின் காரணமாகவோ அல்லது கொழுப்பு திரட்சியின் காரணமாகவோ இருக்கலாம். கொழுப்பு சேரும் போது, கல்லீரல் வீங்கிவிடும். அப்போது வலி அதிகமாகும். எலும்பு வலி போலவும் உணரலாம். எனவே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கலாம்.
கடுமையான பலவீனம்
உணவு சாப்பிட்ட பிறகும் அல்லது ஓய்வெடுத்த பிறகும் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், அது கல்லீரல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொழுப்பு கல்லீரல் செயல்பாட்டில் தலையிடுகிறது. இதனால் சோர்வு மற்றும் பலவீனமான உணர்வு ஏற்படுகிறது. எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு தோன்றினால்... உடனடியாக மருத்துவர்களிடம் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்