Liver : எச்சரிக்கை.. இந்த அறிகுறிகள் இருக்கா. லேசா நினைக்காதீங்க.. கொழுப்பு கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!
Fatty Liver : கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்பு. உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி என்று மருத்துவர் ஷிவ் குமார் சரினும் தெரிவித்துள்ளார்.
Fatty Liver : தற்போதைய மாறி வரும் வாழ்க்கை சூழல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவது, உணவு பழக்கம், பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இப்போதெல்லாம் 30 வயதை கடக்கும் போதே பலருக்கு, சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பலர் தங்களுக்கு பிரச்சனை இருந்தாலும் அதை உணராமல் இருக்கின்றனர். இதுதான் பெரிய ஆபத்து. திடீரென உடலை நலத்தை பெரிய அளவில் சிக்கலை உருவாக்கும். இதனால் எப்போது பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முடிந்தவரை உணவு முறையில் சில மாற்றங்களை சரி செய்து கொள்வது நல்லது. ஆனால் பிரச்சனைகளின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரிடம் என்று ஆலோசனை பெற்று உரிய மருந்துகளை எடுக்கலாம். அந்த வகையில் இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கொழுப்பு கல்லீரல்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் அதை அலட்சியப்படுத்துவது அல்லது லேசாக எடுத்துக்கொள்வது சரியல்ல. ஏனெனில் ஒருவரின் கல்லீரல் கொழுப்பாக மாறிய பின், அதை குணப்படுத்த எதுவும் செய்யவில்லை என்றால், படிப்படியாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். சிலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தாலும், ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள். எது முற்றிலும் தவறு. சிலருக்கு கொழுப்பு கல்லீரல் உள்ளது ஆனால் அது அவர்களுக்கு தெரியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி என்று மருத்துவர் ஷிவ் குமார் சரினும் தெரிவித்துள்ளார்.
வயிற்றில் எப்போதும் வலி இருக்கும்
ஒருவரின் கல்லீரல் கொழுப்பாக மாறினால், அவர் வயிற்றில் வலியை உணர்கிறார். இந்த வலி பெரும்பாலும் வயிற்றின் மேல் வலது பகுதியில் உணரப்படுகிறது. சிலருக்கு வீக்கமும் ஏற்படலாம்.
மஞ்சள் காமாலை
ஒருவரின் கல்லீரல் கொழுப்பாக இருந்தால், தோல் அல்லது கண்களில் மஞ்சள் நிறம் தோன்றக்கூடும், இது மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஏனென்றால், பழைய இரத்த சிவப்பணுக்களில் இருந்து வெளியேறும் பிலிரூபின் என்ற கழிவுப் பொருளை கல்லீரலால் வடிகட்ட முடியாது.
தீவிர சோர்வு மற்றும் பலவீனம்
சோர்வு என்பது கொழுப்பு கல்லீரலின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இது மிகவும் சோர்வாக இருப்பதால், அன்றாட வேலைகளைச் செய்வது உங்களுக்கு கடினமாகிறது. உடல் வலிமை அல்லது சகிப்புத்தன்மை இல்லாதது கொழுப்பு கல்லீரல் அறிகுறியாகும்.
உடல் அரிப்பு
ஒரு நபருக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால், அவர் தோலில் அரிப்பு ஏற்படலாம். குறிப்பாக முகத்தில் இந்த அரிப்பு ஏற்படும். சிலருக்கு கொழுப்பு கல்லீரல் இருக்கும்போது உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற எப்போதும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்