தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்ற தினமும் இந்த பானம் ஒரு டம்ளர்! செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும்!

உங்கள் குடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்ற தினமும் இந்த பானம் ஒரு டம்ளர்! செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 11, 2024, 11:37 AM IST

google News
உங்கள் குடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்ற தினமும் இந்த பானம் ஒரு டம்ளர் மட்டும் போதும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தின் அதிகரிக்கும்.
உங்கள் குடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்ற தினமும் இந்த பானம் ஒரு டம்ளர் மட்டும் போதும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தின் அதிகரிக்கும்.

உங்கள் குடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்ற தினமும் இந்த பானம் ஒரு டம்ளர் மட்டும் போதும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தின் அதிகரிக்கும்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பது சவாலான ஒன்று. பெரும்பாலானோருக்க வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும். இதற்கு குடலின் இயக்கங்கள் காரணமாகும் அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படுவதும் காரணமாகும். ஆனால் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் இந்த பானத்தை மட்டும் ஒரு கப் பருகவேண்டும். இது உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும். இந்த பானத்தை தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சூடான தண்ணீர் – ஒரு கப்

ஆப்பிள் சைடர் வினிகர் – ஒரு டேபிள் ஸ்பூன்

தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை பழத்தின் சாறு – 4 ஸ்பூன்

பட்டைப்பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கப் தண்ணீரை சுடவைத்துக்கொள்ளவேண்டும். கொதிக்கவிடக்கூடாது மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டம்ளரில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரைவிடவேண்டும்.

அதில் வினிகர், தேன் மற்றும் எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து கலக்கவேண்டும். அனைத்தும் நன்றாக கலந்துவிட்டதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அதில் ஒரு சிட்டிகை பட்டைப்பொடியை தூவினால், இந்த பானத்தின் சுவையையும் அதிகரிக்கும். உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளையும் தரும். இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் வேலையாக செய்யவேண்டும்.

இந்த பானத்தின் நன்மைகள்

செரிமானத்தை அதிகரிக்கிறது – வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்த்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உணவை நன்றாக உடைத்து செரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

அமில அளவை சமப்படுத்துகிறது – ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அமிலம் உங்கள் உடலின் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

நீர்ச்சத்தை அதிகரிக்கிறது – உங்கள் நாளை வெதுவெதுப்பான தண்ணீருடன் துவங்கினால், அது உங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு ஆரோக்கியமான செரிமானம் நடைபெற மிகவும் முக்கியமானது ஆகும்.

இயற்கை கழிவு நீக்கம் – எலுமிச்சை சாறு உங்கள் உடலில் இருந்து இயற்கையான முறையில் கழிவுகளை நீக்கச் செய்கிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது.

குறிப்புகள்

உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவேண்டுமெனில், தினமும் இதை பருகவேண்டும். உங்களுக்கு இது உடல் உபாதைகளை ஏற்படுத்தினால், குறைத்துக்கொள்வதோ அல்லது தவிர்ப்பதோ நல்லது. உங்களுக்கு வேறு உடல் உபாதைகள் இருந்தால், உங்கள் மருத்துவரின் பரிந்துரைந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த எளிய மற்றும் சுவையான பானத்தை பருகுவது உங்களின் அன்றாட செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உங்கள் குடலை சுத்தமாக்கும். இதற்கு தேவையான உட்பொருட்களும் எளிதில் கிடைப்பவைதான். எனவே உங்கள் செரிமான ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த பானத்தை பருகுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை