Homemade ice cream: மாம்பழம் முதல் பலாப்பழம் வரை! ஜில் ஐஸ்கிரீம் களை வீட்டிலேயே செய்வது எப்படி? இதோ விவரம்!
May 29, 2024, 07:30 AM IST
Homemade ice cream: வீட்டிலேயே, பழங்கள், உலர்கொட்டைகள் மற்றும் வெல்லம், தேன் மற்றும் பேரிச்சம்பழம் போன்ற இயற்கை இனிப்புகளுடன் ஐஸ்கிரீமை செய்யலாம்.
வீட்டிலேயே, பழங்கள், உலர்கொட்டைகள் மற்றும் வெல்லம், தேன் மற்றும் பேரிச்சம்பழம் போன்ற இயற்கை இனிப்புகளுடன் ஐஸ்கிரீமை செய்யலாம்.
1. மாம்பழ ஐஸ்கிரீம்
(செஃப் தர்லா தலால் செய்முறை)
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கிய அல்போன்சா மாம்பழம் - 1½ கப்
சர்க்கரை - ½ கப்
பால் -½ கப்
பால்-2 கப்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. மாம்பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து மிருதுவாகக் அரைக்கவும்.
2. ஒரு கிண்ணத்தில் மாம்பழ கூழ் மற்றும் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. இந்த கலவையை அலுமினிய கொள்கலனில் ஊற்றி 6 மணி நேரம் வரை உறைய வைக்கவும்
4. இந்த மாம்பழக் கலவையை மிக்சியில் ஊற்றி மிருதுவாக மிக்ஸ் செய்யவும்.
5. பின்னர் இந்த மாம்பழக் கலவையை மீண்டும் அதே அலுமினியம் கொள்கலனுக்கு மாற்றி 10 மணி நேரம் வரை உறைய வைத்து பின்னர் ஸ்கூப் ஆக பறிமாறவும்.
2. பலாப்பழம் ஐஸ்கிரீம்
(செஃப் சஞ்சீவ் கபூரின் செய்முறை)
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பலாப்பழம் - 1 கப்
பால் -2 ¼ கப்
சோள மாவு -2 தேக்கரண்டி
கிரீம் -½ கப்
சர்க்கரை -¾ கப்
ஐஸ்கிரீம் எசென்ஸ் -½ தேக்கரண்டி
சி.எம்.சி - 1 தேக்கரண்டி
ஜி.எம்.எஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. சோள மாவை சிறிது குளிர்ந்த பாலில் கரைக்கவும். மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும்.
2. கொதிக்கும் பாலில் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலக்கவும். சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கொதிக்க விடவும். கரைத்த சோள மாவை சேர்த்து கட்டிகள் வராமல் இருக்க தொடர்ந்து கிளறி பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
3. ஐஸ்கிரீம் கலவையில் ஐஸ்கிரீம் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். ஜிஎம்எஸ் மற்றும் சிஎம்சியை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். கட்டிகள் மீதி இருந்தால் மீண்டும் வடிகட்டவும்.
4. இந்த கலவையை ஒரு ஐஸ்கிரீம் டின்னில் ஊற்றவும். சில பலாப்பழங்களைச் சேர்த்து, கலந்து, மூடியால் மூடி, டீப் ஃப்ரீசரில் வைத்த பின்னர் பரிமாறவும்.
3. தர்பூசணி ஐஸ்கிரீம்
(செஃப் குணால் கபூரின் செய்முறை)
தேவையான பொருட்கள்:
தர்பூசணி சாறு - 3 கப்
பால் கிரீம் அல்லது விப்பிங் கிரீம் - 400 மில்லி
பால் - ¾ கப்
வெண்ணிலா சாறு - 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1½ டீஸ்பூன்
வறுத்த பிஸ்தா - கைப்பிடியளவு
செய்முறை:
1. வெட்டப்பட்ட தர்பூசணியை ஒரு பிளெண்டரில் சேர்த்து விதைகளை நீக்கி சாற்றை நீக்கி வடிகட்டவும்.
2. ஒரு பாத்திரத்தில் சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். அது பாதியாக குறைந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி முழுமையாக ஆறவிடவும்.
3. இதற்கிடையில், க்ரீம் கெட்டியாகும் வரை மென்மையான உச்ச நிலைக்கு அடிக்கவும். எல்லா நேரங்களிலும் கிரீம் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. இப்போது ஆறிய தர்பூசணி சாற்றில் பால், வெண்ணிலா சாறு, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடிக்கப்பட்ட கிரீம் சேர்த்து அவற்றை ஒன்றாக கலக்கவும்.
5. நீங்கள் விரும்பும் பட்சத்தில் நிறமிகளை சேர்கலாம். பின்னர் சில வறுத்த பிஸ்தாக்களைச் சேர்த்து நன்கு கலக்கி ஐஸ்கிரீம் கலவையை ஒரு அச்சுக்குள் ஊற்றவும்.
6. பின்னர் அச்சில் ஊற்றப்பட்ட ஐஸ்கிரீம் கலவையை 24 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
7. தயாரானதும் வெளியே எடுத்து, அதன் மேல் நறுக்கிய தர்பூசணிகள் மற்றும் வறுத்த பிஸ்தாவை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.
4. தேங்காய் ஐஸ்கிரீம்
(செஃப் சஞ்சீவ் கபூரின் செய்முறை)
தேவையான பொருட்கள்:
மென்மையான தேங்காய் துண்டுகள் - 2 கப்
விப்பிங் கிரீம் - 1½ கப்
தேங்காய் தண்ணீர் - 1 கப்
தூள் சர்க்கரை - ¾ கப்
பால் - ½ கப்
தேங்காய் பால் - 1 கப்
நறுக்கிய இளநீர் வழுக்கை - ¼ கப்
செய்முறை:
1. மென்மையான தேங்காய் வழுக்கை மற்றும் தேங்காய் தண்ணீரை ஒன்றாக கலந்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.
2. விப்பிங் கிரீம், பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றக கலக்கவும்.
3. தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. கலவையை காற்று புகாத கொள்கலனில் மாற்றி, நறுக்கிய தேங்காயை தூவி லேசாக கலக்கி ஒரு மூடியால் மூடவும். பின்னர் 5 முதல் 6 மணி நேரம் வரை ப்ரீசரில் வைத்து பின்னர் பறிமாறவும்.
5. அன்னாசி ஐஸ்கிரீம்
(செஃப் தர்லா தலால் செய்முறை)
தேவையான பொருட்கள்:
பால் - 2 1/2 கப்
கார்ன்ஃப்ளார் -1 டீஸ்பூன்
சர்க்கரை - 5 டீஸ்பூன்
கிரீம் - 1/2 கப்
நறுக்கப்பட்ட அன்னாசிப்பழம் - 1 கப்
முறை:
1. ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மற்றும் ½ கப் பால் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைக்கவும்.
2. மீதமுள்ள 2 கப் பால் மற்றும் சர்க்கரையை ஒரு ஆழமான நான்-ஸ்டிக்கில் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கலக்கவும்.
3. கார்ன்ஃப்ளார்-பால் கலவையைச் சேர்த்து, நன்கு கலந்து, மிதமான தீயில் 4 நிமிடங்கள் வைத்து கிளறி விடவும்.
4. கலவையை முழுமையாக குளிர்விக்கவும் ஆறியதும் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் அன்னாசிப்பழ எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. கலவையை ஆழமற்ற அலுமினிய கொள்கலனில் ஊற்றவும். ஒரு அலுமினியத் தாளில் மூடி, 6 மணி நேரம் அல்லது அரை செட் வரை உறைய வைக்கவும்.
6. கலவையை மிக்சியில் ஊற்றி மிருதுவாகக் கலக்கவும்.
7. கலவையை மீண்டும் அதே அலுமினியம் ஆழமற்ற கொள்கலனில் மாற்றவும், அன்னாசிப்பழம் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை மூடி 10 மணி நேரம் வரை உறைய வைத்து பின்னர் பரிமாறவும்.
டாபிக்ஸ்