Weather Update: கரையை கடந்த ரீமல் புயல்! தமிழ்நாட்டின் இனி வெப்பம் அதிகரிக்குமா? சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்!
Weather Update: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கரையை கடந்த ரீமல் புயல்! தமிழ்நாட்டின் இனி வெப்பம் அதிகரிக்குமா? சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்! (AFP)
ரீமல் புயல் கரையை கடந்து உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கரையை கடந்த ரீமல் புயல்
நேற்று (26.05.2024) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு (26.05.2024) 2230 மணி (27.05.2024) 0030 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்) கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது.
தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது.
