தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் உணவில் கட்டாயம் 2 முட்டை! புரதம் மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது!

தினமும் உணவில் கட்டாயம் 2 முட்டை! புரதம் மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது!

Priyadarshini R HT Tamil

Oct 14, 2024, 11:52 AM IST

google News
தினமும் உணவில் கட்டாயம் 2 முட்டை சேர்க்க வேண்டும். அதுபுரதச்சத்து மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அள்ளி வழங்குகிறது. அது உங்கள் உடலுக்கு மேலும் தரும் நன்மைகள் என்ன?
தினமும் உணவில் கட்டாயம் 2 முட்டை சேர்க்க வேண்டும். அதுபுரதச்சத்து மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அள்ளி வழங்குகிறது. அது உங்கள் உடலுக்கு மேலும் தரும் நன்மைகள் என்ன?

தினமும் உணவில் கட்டாயம் 2 முட்டை சேர்க்க வேண்டும். அதுபுரதச்சத்து மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அள்ளி வழங்குகிறது. அது உங்கள் உடலுக்கு மேலும் தரும் நன்மைகள் என்ன?

நீங்கள் தினமும் உணவில் ஏன் கட்டாயம் இரண்டு முட்டைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் குவிந்துள்ளது. தினமும் உணவில் இரண்டு முட்டைகளை சேர்த்துக்கொள்ளும்போது அது பல வழிகளிலும் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உங்கள் உணவில் தினமும் இரண்டு முட்டைகளை சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டு, உணவில் கட்டாயம் சேர்த்து பலன்பெறுங்கள்.

உயர்தர புரதம் உள்ளது

முட்டையில் அனைத்து 9 அமினோ அமிலங்கள் உள்ளன. அதை சாப்பிடும்போது அவை உங்கள் உடலுக்கு கிடைக்கும். இது உங்களுக்குத் தேவையான புரதச்சத்துக்களைக் கொடுக்கும். நீங்கள் இரண்டு முட்டைகளை தினமும் சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் உள்ள திசுக்களை சரிசெய்ய தேவையான ஆற்றலைத் தருகிறது. தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாள் முழுவதும் ஆற்றல் அளவை தக்கவைக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது

முட்டைகளில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடலுக்கு கொடுக்கிறது. மேலும் முக்கிய மினரல்களான செலினியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

முட்டையில் கோலைன்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து மூளை நல்ல முறையில் இயங்கவும், வளரவும் உதவும் முக்கியமானது ஆகும். கோலைன்கள், உங்கள் நினைவாற்றலை முறைப்படுத்துகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, உங்களுக்கு மனத்தெளிவை ஏற்படுத்துகிறது. முட்டைகள், உங்கள் மூளைக்கு ஊட்டமளித்து, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் உணவாகும்.

உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

முட்டைகள் உடல் எடை மேலாண்மைக்கு உதவுகின்றன. இவற்றில் கலோரிகள் குறைவு மற்றும் புரதம் அதிகம். அது உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் உணவில் காலை உணவாக முட்டைகளை சேர்த்துக்கொள்வது, உங்களுக்கு பசி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. நாள் முழுவதும் உங்களைக் கட்டுப்பட்டுடன் சாப்பிட வைக்கிறது.

இதய ஆரோக்கியம்

முட்டை கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் என்பது ஒரு கட்டுக்கதை, முட்டையை மிதமான அளவு எடுத்துக்கொள்வது உங்களின் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் உடல்லி நல்ல கொழுப்பை முட்டை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் உள்ளிட்ட இதய பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே முட்டையை உங்கள் உணவில் ஒரு அங்கமாகக் கொள்வது அவசியம்.

எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது

முட்டையில் இயற்கை வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு அவசியமாகிறது. எனவே வலுவான எலும்புகளையும், பற்களையும் உருவாக்க நீங்கள் முட்டைகளை உட்கொள்ளவேண்டும். இது உங்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கண் ஆரோக்கியம்

முட்டையில் முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஸியாக்ஸான்தின் மற்றும் லுடீன் ஆகும். இது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் கண்களை ஆபத்து நிறைந்த புறஊதா கதிர்களிடம் இருந்து காக்கின்றன. இதனால் கண்புரை நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. வயோதிகம் தொடர்பான கண் பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

முட்டையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளன. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் டி, செலினியம் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்கள் அதற்கு உதவுகிறது. எனவே தினமும் முட்டைகளை எடுத்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம் வலுப்பெறவும், உங்கள் மீண்டெழும் திறன் அதிகரிக்கவும் உதவும். உங்களை பொதுவான நோய் தொற்றுகளிடம் இருந்து காக்க முட்டைகள் உதவுகிறது.

தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியம்

முட்டையில் உள்ள அதிகப்படியான புரதச்சத்துக்கள், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பயோடின்கள், உங்கள் சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. முட்டையை நீங்கள் உணவில் தினமும் எடுத்துக்கொள்வது உங்கள் தலைமுடியை வலுப்படுத்துகிறது, சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்துக்குப் பொலிவைத் தருகிறது.

ஆற்றல்

முட்டைகளில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உங்களுக்கு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் இரண்டு முட்டைகளில் இருந்து கிடைக்கிறது. இதை நீங்கள் காலை உணவு அல்லது ஸ்னாக்ஸ் இரண்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் உணவில் முட்டையை சாப்பிடுவது எப்படி?

உங்கள் அன்றாட உணவில் முட்டையை சேர்த்துக்கொள்ள, நீங்கள் அவற்றை வேக வைத்து சாப்பிடவேண்டும். அதை பொரியல் செய்து அல்லது ஆம்லேட் செய்தும் சாப்பிடலாம். ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முட்டையை சாப்பிடலாம். உங்களின் சரிவிகித உணவில் முட்டை கட்டாயம் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை