Spicy Potato Fry Recipe: ரசம் வச்சா இந்த உருளைக்கிழங்கு பொரியல் மட்டும் வைங்க! சாப்பாடு மிச்சம் ஆகாது!
Spicy Potato Fry Recipe: தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு பல பெருமை இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் அதன் உணவுகளும் ஒரு வகையான பெருமையை வழங்குகிறது. இத்தகையை பெருமை மிக்க சமையல் முறை தான், செட்டிநாடு சமையல். இதில் அன்றாடம் செய்யும் பொரியல் தொடங்கி அசைவம் வரை அனைத்தும் அசத்தும் ரெஸிபிகளைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு பல பெருமை இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் அதன் உணவுகளும் ஒரு வகையான பெருமையை வழங்குகிறது. இத்தகையை பெருமை மிக்க சமையல் முறை தான், செட்டிநாடு சமையல். இதில் அன்றாடம் செய்யும் பொரியல் தொடங்கி அசைவம் வரை அனைத்தும் அசத்தும் ரெஸிபிகளைக் கொண்டுள்ளது. ருசியான மற்றும் காரமான செட்டிநாடு உருளை வறுவல் அல்லது உருளைக்கிழங்கு பொரியல், செட்டிநாடு சமையல் குறிப்புகளில் காணப்படும் எளிதான மற்றும் வேகமாக செய்யப்படும் சைட்டிஷ் ஆகும். உருளை வறுவல் எதற்கும் நன்றாக இருக்கும். இந்த டிஷ் புதிதாக அரைக்கப்பட்ட மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
அரை கிலோ உருளைக்கிழங்கு, 2 பெரிய வெங்காயம், 2 தக்காளி, 2 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு எண்ணெய், அரை டீஸ்பூன் கடுகு விதைகள், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 துளிர் கறிவேப்பிலை இலைகள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செட்டிநாடு மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
4 காய்ந்த சிவப்புமிளகாய், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை,அங்குல இலவங்கப்பட்டை குச்சி, 2 ஏலக்காய், சிறிதளவு கிராம்பு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகள், 1 டீஸ்பூன் கருப்புசீரகம், 3 டேபிள் ஸ்பூன் துருவிய மிளகு, ஒரு முழு தேங்காய், 2 துளிர் கறிவேப்பிலை ஆகியவைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் அனைத்து செட்டிநாடு மசாலா பொருட்களையும் சேர்க்க வேண்டும். நன்கு பொன்னிறமாக வறுத்தெடுக்கப்பட்ட பின், அவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும்.
முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்துக் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அது சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை வரிசையாக சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இதில் புதிதாக அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்போது வேகவைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு சேர்த்து காய்ந்ததும் வதக்க வேண்டும். இந்த உருளைக் கிழங்கு பொரியலை மேலே கொத்தமல்லி இலைகளால் தூவி, சாதத்துடன் சூடாகப் பரிமாற வேண்டும் குழம்பு தேவை இல்லை. இதையே சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சப்பிடுவர்.
டாபிக்ஸ்