தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஐஸ்வர்யா கக்கிய வன்மம்.. கரண்ட் வலையில் கார்த்தி.. தேடி வரும் ஆப்பு.. கீதாவின் நிலை என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

ஐஸ்வர்யா கக்கிய வன்மம்.. கரண்ட் வலையில் கார்த்தி.. தேடி வரும் ஆப்பு.. கீதாவின் நிலை என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

Oct 09, 2024, 03:16 PM IST

google News
தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கார்த்தியை கண்டிப்பாக ஜெயிலுக்கு அனுப்பியே தீரவேண்டும் என்று ஐஸ்வர்யா சபதம் ஏற்கிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்!
தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கார்த்தியை கண்டிப்பாக ஜெயிலுக்கு அனுப்பியே தீரவேண்டும் என்று ஐஸ்வர்யா சபதம் ஏற்கிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்!

தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கார்த்தியை கண்டிப்பாக ஜெயிலுக்கு அனுப்பியே தீரவேண்டும் என்று ஐஸ்வர்யா சபதம் ஏற்கிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்!

அருண் எடுத்த முடிவு.. கார்த்தியை பழி தீர்க்க துடிக்கும் ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!

கோபப்பட்ட அருண்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அருண் ஐஸ்வர்யா மீது இருக்கும் கோபத்தில் அவளது துணிமணிகளை கொளுத்திய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

 

அதாவது, அருண் இனிமே ஐஸ்வர்யாவோட வாழ முடியாது.. அவளுக்கு இனி இந்த வீட்டில் இடமும் இல்லை என்று ஆவேசப்படுகிறான், மேலும் இவ்வளவு நாளா, இந்த விஷ பூச்சியோட சேர்ந்து வாழ்ந்தேனு சொல்லும் போது, எனக்கே அருவருப்பா இருக்கு என்றும் கோபப்படுகிறான்.

ஐஸ்வர்யா எடுத்த சபதம்

தர்மலிங்கம், ஜானகி என எல்லாரும் ஐஸ்வர்யா செய்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசுகின்றனர். அதனை தொடர்ந்து கார்த்திக் மற்றும் அருண் என இருவரும் வெளியே கிளம்ப அப்போது ராஜேஸ்வரி அவர்களை வழி மறிக்கிறாள்.

அவள், ஐஸ்வர்யா என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் அவளை ஜெயிலுக்கு அனுப்பியது எல்லாம் சரியே இல்லை என்று சொல்ல, அருணுக்கும், ராஜேஸ்வரிக்கும் வாக்குவாதம் உருவாகிறது. பிறகு ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவை சந்திக்க ஸ்டேஷனுக்கு வருகிறாள். ஐஸ்வர்யாவை சந்தித்து அவள் ஆறுதல் சொல்ல, என்னை ஜெயிலுக்கு அனுப்பிய அந்த கார்த்திக்கை சும்மா விடகூடாது , பழி வாங்கியே ஆக வேண்டும் என்று ஆவேசப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு நான் தீபா இல்ல, கீதா என்ற உண்மையை கீதா உடைக்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தாள். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க அனைவரும் ரவுண்ட் கட்டி ஐஸ்வர்யாவை திட்டினர்.

ஒரு கட்டத்தில் அருண், ஐஸ்வர்யாவை அறைந்து உன்னையும் என்னையும் சேர்த்து வைத்தது தீபாதான்; அப்படி இருக்கும்போது அவளுக்கே இப்படி உன்னால துரோகம் பண்ண முடிந்தது என ஆவேசப்பட்டான். அபிராமி இவளை போலீஸ்ல புடிச்சு கொடு தூக்குல போடட்டும் என ஆவேசப்பட, கார்த்திக் ஏற்கனவே சரவணனுக்கு தகவல் கொடுத்து விட்டேன் என்று கூறினான் .

கொஞ்ச நேரத்தில் போலீஸ் வீட்டுக்கு வந்து ஐஸ்வர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சரவணன் வெளியில் சென்ற நேரத்தில், ஸ்டேஷனுக்கும் நுழைந்த துங்கா ஐஸ்வர்யாவை சந்தித்து பேசினான்.. ஐஸ்வர்யா நான் நல்லா மாட்டிக்கிட்டேன் எல்லாத்துக்கும் காரணம் அந்த கீதா தான் என்று நடந்ததை கூறினாள்.

மறுபக்கம் அருண் இவ்வளவு நாளா நல்லவள் வேஷம் போட்டு நம்ம குடும்பத்தை கெடுத்த அவளோட வாழ முடியாது என்று சொல்லி ஐஸ்வர்யாவின் துணிமணிகளை எடுத்து வந்து வெளியே கொட்டி கொளுத்தினான்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை