பிரபல சேனலுக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் கிடுகிடுவென உயரும் 3 சீரியல்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரபல சேனலுக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் கிடுகிடுவென உயரும் 3 சீரியல்கள்

பிரபல சேனலுக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் கிடுகிடுவென உயரும் 3 சீரியல்கள்

Aarthi V HT Tamil Published Jun 08, 2023 08:09 PM IST
Aarthi V HT Tamil
Published Jun 08, 2023 08:09 PM IST

பிரபல சேனலுக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் கிடுகிடுவென உயரும் 3 சீரியல்கள்!

 டிஆர்பி ரேட்டிங்
டிஆர்பி ரேட்டிங்

அதிலும் குறிப்பாக புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீதா ராமன், கார்த்திகை தீபம், மாரி, மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த சீரியலின் ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்த ரேட்டிங் விவரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, சீதா ராமன், மாரி போன்ற சீரியல்கள் கடந்த வாரத்தை காட்டிலும் நல்ல ரேட்டிங்கை பெற்று முன்னேற்றங் பாதையில் நகர்ந்து வருகிறது.

அதற்கு அடுத்ததாக இரு வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய அண்ணா சீரியலும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஓப்பனிங் ரேட்டிங் அளவை தங்க வைத்து கொண்டுள்ளது. இந்த வாரம் ஷண்முகத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம், சௌந்தரபாண்டி சூழ்ச்சி போன்ற காரணங்களால் ரேட்டிங் அதிகரிக்கும் என எதிர்பார்ப்படுகிறது.

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்கள் பிரபல டிவி சேனலுக்கு டப் கொடுத்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.