பக்கா ஸ்கெட்ச்.. தீபாவாக மாறிய கீதா.. வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. காரியத்தை முடித்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Oct 08, 2024, 02:53 PM IST
கார்த்திக் போட்ட பக்கா பிளானால் ஐஸ்வர்யா தானே உண்மையை உளறிவிட்டாள். இதையடுத்து அவளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைதான ஐஸ்வர்யா.. கார்த்திக்கின் அதிரடியால் அருண் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா தீபாவை தானே மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிக்கிய ஐஸ்வர்யா
அதாவது ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு நான் தீபா இல்ல கீதா என்ற உண்மையை கீதா உடைக்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க, அனைவரும் ரவுண்ட் கட்டி ஐஸ்வர்யாவை திட்டுகின்றனர்.
ஒரு கட்டத்தில் அருண் ஐஸ்வர்யாவை அறைந்து உன்னையும், என்னையும் சேர்த்து வைத்தது தீபா தான். அப்படி இருக்கும்போது அவளுக்கே இப்படி உன்னால துரோகம் பண்ண முடிஞ்சது என ஆவேசப்படுகிறான். இதனையடுத்து கொந்தளித்த அபிராமி, இவளை போலீஸ்ல புடிச்சு கொடு; தூக்குல போடட்டும் என ஆவேசப்பட்டாள். இதைக்கேட்ட கார்த்திக் ஏற்கனவே சரவணனுக்கு தகவல் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறான்.
ஜெயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா
கொஞ்ச நேரத்தில் போலீஸ் வீட்டுக்கு வந்து ஐஸ்வர்யாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். சரவணன் வெளியில் சென்ற நேரத்தில் ஸ்டேஷனுக்கும் நுழையும் துங்கா, ஐஸ்வர்யாவை சந்தித்து பேசுகிறான். அப்போது ஐஸ்வர்யா, நான் நல்லா மாட்டிக்கிட்டேன்; எல்லாத்துக்கும் காரணம் அந்த கீதா தான் என்று நடந்ததை சொல்கிறாள்.
மறுபக்கம் அருண், இவ்வளவு நாளா நல்லவ வேஷம் போட்டு நம்ம குடும்பத்தை கெடுத்த அவளோட இனி வாழ முடியாது என்று சொல்லி, ஐஸ்வர்யாவின் துணிமணிகளை எடுத்து வந்து வெளியே கொட்டி கொளுத்துகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
ஐஸ்வர்யா மீது ஏதோ சந்தேகமாகவே இருந்த காரணத்தால், கார்த்திக் அவளை மடக்கி பிடித்து உண்மையை வர வைக்க முடிவெடுத்தான். அதன்படி, கீதா தீபாவாக நடித்தாள்.
கீதா மீனாட்சி ரூமில் படுத்துக் கொள்வது போல எல்லோரையும் நம்ப வைத்து விட்டு, பின்பக்க வழியாக வெளியே வர வைத்தான். அதன் பிறகு கீதா, தீபா போல் வேஷம் அணிந்து கொண்டு வந்தாள்.
இதனையடுத்து, தீபா ஐஸ்வர்யா அக்கா கிட்ட தனியா பேசணும் என்று சொல்லி அவளை ரூமுக்குள்ள அழைத்து சென்றாள்.
ரூமுக்குள் வந்தது தீபா அன்னைக்கு மலையிலிருந்து என்ன புடிச்சு தள்ளும் போது நீங்களும் அங்க இருந்து இங்க எதுக்காக இப்படி பண்ணீங்க உண்மைய சொல்லுங்க என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ந்து போனாள். உன் மேல இருந்த கோவத்துல புத்தி கெட்டுப் போய் இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு என்று சொன்னாள். ஐஸ்வர்யா பேசியதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாபிக்ஸ்