Karthigai Deepam: ஊசலாடும் தீபாவின் உயிர்.. கடவுளை அழைக்கும் நர்ஸ்கள்.. கலக்கத்தில் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தீபாவை காப்பாற்ற கீதா எடுத்த முடிவு.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கோயிலில் வைத்து, கீதா கழுத்தில் கார்த்திக்கை தாலி கட்ட சொல்ல, அவன் இது தீபாவே இல்லை என்ற உண்மையை உடைத்தான். இந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
போராடும் சக்தி
வீட்டிற்கு வந்த கார்த்திக், தீபாவின் நினைவுகளை நினைத்து கீதாவிடம் வருத்தத்துடன் பேசுகிறான். மறுபக்கம், துங்காவிடமிருந்து தப்பித்து ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த சக்தி, நடந்த விஷயங்களை அங்கு இருக்கும் நர்ஸ்ஸிடம் சொல்கிறாள்.
அது மட்டுமின்றி, தீபாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க, அவள் பாடிய பாடலையே எல்லோரும் சேர்ந்து பாடினால், தீபாவுக்கு உடல்நிலை சரியாக வாய்ப்பு உள்ளது என ஒன்று சேர்ந்து பாட முடிவெடுக்கின்றனர்.