வீடியோவால் சிக்கிய பிரபலம்.. மீண்டும் மீண்டும் மருத்துவத்துறையை உசுப்பேற்றி வீடியோ.. இனி என்ன நடக்கப்போகிறது?
Oct 21, 2024, 01:22 PM IST
யூடியூபர் இர்பான் தனது குழந்தை பிறந்தபோது, அதன் தொப்புள் கொடியை கட் செய்யும் வீடியோவை வெளியிட்டு மருத்துவத்துறையை மீண்டும் வம்பிற்கு இழுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களிடம் பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்பான். இவரது வீடியோக்களுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்கள். நடிகர் நெப்போலியன் இர்பானை அமெரிக்காவிலுள்ள தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டி இருப்பார்.
யூடியூபில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வரும் இவர், பின்னாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று விதவிதகமான உணவுகளை சமைத்து அசத்தி வந்தார்.
குழந்தை பிறந்த வீடியோ
இவருக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர், தனது குழந்தை பிறக்கும் போது நடந்த அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து மை பிரின்ஸஸ் இஸ் ஹியர் எனும் தலைப்பில் யூடியூப் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதுதான இப்போது இர்பானை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் இருந்து ஆரம்பித்துள்ள அவர், மருத்துவமனையில் மனைவி செய்யும் உடற்பயிற்சிகள், அவருக்கு வலி ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மையத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டது, குழந்தை பிறந்தது.அதன் தொப்புள் கொடியை இர்பான் கட் செய்தது, குழந்தையை மனைவியிடம் காட்டி மகிழ்வது, குடும்பத்தினரிடம் குழந்தையை காட்டி மகிழ்வது என அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.
வெடித்த சர்ச்சை
இப்படி இவர் பதிவிட்ட வீடியோ தான், தற்போது சர்ச்சையாகி உள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ள போது, இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்தது தான் இப்போது பலரையும் பேச வைத்துள்ளது. இது மருத்துவ ரீதியாக சரியானதா? மருத்துவ துறையில் இதற்கு இடம் உள்ளதா? என்பது குறித்து மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடரும் கண்டனங்கள்
இதனை கவனித்த ஊரக நலப்பணி இயக்குனர் மருத்துவர்ஜெ.ராஜமூர்த்தி யூடியூபர் இர்பானிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க உள்ளோம். அதுமட்டுமின்றி, இந்த செயலுக்கு அனுமதி அளித்த , சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்க உள்ளோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல். தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி இந்த வீடியோவை வெளியிட்டது மிகப்பெறும் தவறு என மருத்துவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலினத்தை தெரிவித்து வீடியோ
முன்னதாக இவர், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியில் அறிவித்து பெரும் சர்ச்சைகளை சந்தித்தார். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது சட்டப்படி தவறு என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர் வெளிநாட்டிற்கு சென்று இந்த பரிசோதனையை செய்திருக்கிறார். இதனை அதோடு நிறுத்தாமல் குழந்தையின் பாலினத்தை ரிவீல் செய்வதாகக் கூறி நிகழ்ச்சியே நடத்தி வீடியோவாகவும் வெளியிட்டார்.
வீடியோவை நீக்க உத்தரவு
இது மருத்துவத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவத்துறையினர் அவரிடம் விசாரித்து வந்தனர். மேலும் அந்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கம் செய்தனர். இந்தப் பிரச்சனையே முழுவதுமாக முடிந்ததா என தெரியாத நிலையில் அடுத்த வீடியோ வெளியிட்டு சம்பவம் செய்துள்லார் இர்பான்.
டாபிக்ஸ்