YouTuber Irfan: ’இர்பானின் சர்ச்சை வீடியோ நீக்கம்! பறந்த நோட்டீஸ்! பம்மிய இர்பான்!’
YouTuber Irfan: இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியானது இந்த நிலையில் யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து இருக்கிறது.
YouTuber Irfan: தனது மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் யூடியூபர் இர்பானின் வீடியோ சர்ச்சையான நிலையில் யூடியூபில் இருந்து அந்த வீடியோவை இர்பான் நீக்கி உள்ளார். பிரபல யூடியூபரான இர்பானுக்கு பல்வேறு உணவங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து, அதனை வீடியோக வெளியிட்டு வருவதன் மூலம் பிரபலம் ஆனார்.
சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வரும் இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான சர்ப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். யூடியூபர் இர்பானுக்கும் ஆலியாஎன்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இர்பானின் மனைவி கர்ப்பம்
இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் என்ன என்பது குறித்து யூடியூப் சமூகவலைத்தளத்தில் யூடியுபர் இர்பான் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக துபாய்க்கு சென்று தனது மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து இர்பான் அறிந்து கொண்டுள்ளார்.
’இந்த வீடியோ எடுப்பது இந்தியாவுல இல்ல, இது வந்து துபாய், இந்தியாவில் இது அனுமதி கிடையாது. வெளிநாட்டில் இது சாதாரணம், நமது ஊரில் கூட இது சாதாரணமாக இருந்தது ஆனால் அதற்கு பிறகு இது நிறுத்தப்பட்டு விட்டது. 1993இல் நான் பிறக்கும்போது கூட நான் என்ன பாலியனம் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். ஆனால் அதற்கு பிறகு இதை அரசு தடை செய்தது’ என்று இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.
யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை
அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார். அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார். இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்பான் அறிவித்தார்.
பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், Youtuber இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியானது இந்த நிலையில் யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து இருக்கிறது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்தக்குழு பரிந்துரையாக அளிக்கும் என செய்திகள் வெளியானது.
தனக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை என்று யூடியூபர் இர்பான் சொன்னதாக புதிய தலைமுறை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இதனிடையே தனது இர்பான் வியூஸ் என்ற யூடியூப் சேனலில் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை இர்பான் நீக்கி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்