Youtuber Irfan: சோதனை மேல் சோதனை.. போலீசில் வசமாக சிக்கிய இர்ஃபான்.. தேடி வந்த பில் - நடந்தது என்ன?
Youtuber Irfan: சர்ச்சை மேல் சர்ச்சையாக சந்தித்துக்கொண்டிருக்கும் இர்ஃபான், தற்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, போக்குவரத்து விதிகளை மீறியிருக்கிறார்.

YouTuber Irfan: பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து, அதனை வீடியோவாக வெளியிட்டு வந்த இவர், அண்மை காலமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார். இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கு திருமணம் நடந்தது.
இர்ஃபானின் மனைவி கர்ப்பம்
இர்ஃபானின் மனைவி ஆலியா கர்ப்பமாக இருந்த நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் சோதனை செய்து தெரிந்து கொண்டு இந்தியாவில் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் மன்னிப்புக் கேட்ட பின்னர், அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இவருக்கும், பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ரஃபிக்கும் யூடியூப்பில் வார்த்தைப்போர் மூண்டது. இந்த பிரச்சினையில் இருதரப்பும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர்.
குறிப்பாக, இர்ஃபான் உறவினர் ஏற்படுத்திய கார் விபத்து விவகாரமும், அதில் இருந்து அவர்கள் தப்பித்தது குறித்து பிரியாணி மேன் பேசி இருந்தது கடும் விவாதத்தை எழுப்பியது.