தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yogi Babu: ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பங்கேற்கும் யோகி பாபு நடித்த தமிழ்த் திரைப்படம்!

Yogi Babu: ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பங்கேற்கும் யோகி பாபு நடித்த தமிழ்த் திரைப்படம்!

Manigandan K T HT Tamil

Aug 31, 2024, 05:01 PM IST

google News
“இப்படத்தின் சாதனை, படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரின் கடின உழைப்புக்குச் சான்றாகும். மண்வாசம் மாறாமல், இந்த படத்தின் திரைகதைக்கு உயிரூட்டிய இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்களான ஏகன், யோகி பாபு மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
“இப்படத்தின் சாதனை, படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரின் கடின உழைப்புக்குச் சான்றாகும். மண்வாசம் மாறாமல், இந்த படத்தின் திரைகதைக்கு உயிரூட்டிய இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்களான ஏகன், யோகி பாபு மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”

“இப்படத்தின் சாதனை, படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரின் கடின உழைப்புக்குச் சான்றாகும். மண்வாசம் மாறாமல், இந்த படத்தின் திரைகதைக்கு உயிரூட்டிய இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்களான ஏகன், யோகி பாபு மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”

கோழிப்பண்ணை செல்லதுரை படம் 22வது ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட தமிழ் படம் ஆகும். இதில் யோகி பாபு நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார். கோழிப்பண்ணை செல்லதுரை படத் தயாரிப்பு நிறுவனம் எழுதிய பாராட்டுக் கடிதம் இதோ. "விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில், கோழிப்பண்ணை செல்லதுரை எனும் எங்களின் புதிய திரைப்படம், 22ஆவது ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில், எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறோம். ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில், முதல் முறையாக பங்கேற்கும் தமிழ்த் திரைப்படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் முதல் படமான Joe வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகவும் படைப்பாகவும் அமைகிறது. இந்த சாதனையால் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் தயாரிப்பில் பங்காற்றிய அனைத்து படக் குழுவினரும் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

இப்படத்தின் சாதனை, படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரின் கடின உழைப்புக்குச் சான்றாகும். மண்வாசம் மாறாமல், இந்த படத்தின் திரைகதைக்கு உயிரூட்டிய இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்களான ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் மற்றும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தத்தம் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் கொடுத்து இந்த படம் சர்வதேச அங்கிகாரங்களை எட்ட உதவியிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த இனிமையான தருணத்தில் நன்றி செலுத்துகிறோம்.

கமர்சியல் படமாக மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில், உலக ரசிகர்களின் மனதை கவரும் நோக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தினை தயார் செய்துள்ளோம்.

இனி வெளிவரும் எங்கள் படைப்புகள் அனைத்தும் கமர்சியல் மற்றும் உலகத்தரத்தில் மட்டுமே இருக்கும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 20, 2024 அன்று உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் தத்தம் பேராதரவை எங்கள் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்திற்கு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என டாக்டர்.டி.அருளானந்து, தயாரிப்பாளர், விஷன் சினிமா ஹவுஸ் வெளியிட்ட பாராட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி

சீனு ராமசாமி ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். தென்மேற்கு பருவக்காற்று (2010), நீர்ப்பறவை (2012), மற்றும் தர்ம துரை (2016), கண்ணே கலைமானே (2019) மற்றும் மாமனிதன் (திரைப்படம்) (2022) போன்ற தரமான படங்களை இயக்கியதற்காக அறியப்பட்டவர்.

கூடல் நகர் (2007) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திற்காக அவர் பாராட்டைப் பெற்றார், இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. "நன்கு வடிவமைக்கப்பட்ட திரைக்கதை, தெளிவாக வரையறுக்கப்பட்ட கதாபாத்திரங்கள், மென்மையான, யதார்த்தமான காட்சிகளின் ஓட்டம் மற்றும் அதன் முழு நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு ஆகியவை 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தை சமீப காலங்களில் அதிகம் பார்க்கக்கூடிய திரைப்படமாக மாற்றுகிறது" என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டார். அவரது அடுத்த படமான நீர்ப்பறவை (2012) குறித்து மேலும் ஒரு விமர்சகர் மூலம் நேர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது, “நீர் பறவை என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தத்தின் அழகான பதிவு. சென்று பாருங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி