HBD Charu Nivedita: சக மனிதன், பிராணிகள் மீது அன்பை போதிக்கும் படைப்புகள் தரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா பிறந்த நாள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Charu Nivedita: சக மனிதன், பிராணிகள் மீது அன்பை போதிக்கும் படைப்புகள் தரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா பிறந்த நாள்

HBD Charu Nivedita: சக மனிதன், பிராணிகள் மீது அன்பை போதிக்கும் படைப்புகள் தரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா பிறந்த நாள்

Manigandan K T HT Tamil
Dec 18, 2023 04:45 AM IST

அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா
எழுத்தாளர் சாரு நிவேதிதா (https://www.charuonline.com/)

திருவாரூர் மாவட்டம் இடும்பவனத்தில் 1953ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கே.அறிவழகன். இவர், சாரு நிவேதிதா என்ற பெயரில் தனது படைப்புளை எழுதி வருகிறார்.

இவர் மார்க்விஸ் டி சேட் மற்றும் ஆண்டாள் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

அவரை பற்றி அவரது Charuonline.com-இல் குறிப்பிடப்பட்டுள்ளவை அப்படியே இங்கே..

அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.

இவரது நாவல் ஸீரோ டிகிரி, ஸ்விட்ஸர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 – 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது. தி இந்து நாளிதழ் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது.

இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இவர் எழுதும் பத்திகள் குஷ்வந்த் சிங்கின் எழுத்து அளவுக்குப் பிரசித்தி பெற்றவை.

புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகளுள் முக்கியமானவை.

இவர் எழுதிய நாவல்கள்

எக்ஸிஸ்டென்ஷியஸிஸமும் ஃபேன்சி பனியனும், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, காமரூப கதைகள், தேகம், புதிய எக்ஸைல்

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.