பிக் பாஸ் தான் முக்கியம்.. சீரியல் வாய்ப்பை தூக்கி எறிந்த தர்ஷிகா.. திருப்பம் ஏற்படுமா?
Oct 06, 2024, 10:14 PM IST
பிக் பாஸ் எட்டாவது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் தர்ஷிகா சீரியலிலிருந்து விலகி இருக்கிறார்.
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
பெரிய பிளானில் பிக் பாஸ்
இந்த முறை வீட்டிற்குள் இரண்டு கோடுகள் இருக்கிறது. அதனால் பெரிய பிளான் இதில் பிக் பாஸ் வைத்து இருக்கிறார். மேலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை படுக்கை அறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு படுக்கை அறை இருக்கிறது. ஒன்றில் ஷேரிங் படுக்கையும் மற்றொன்றில் இரண்டு பேர் படுத்து உறங்குவது போல் அமைக்கப்பட்டு உள்ளது.
எதிர் வீட்டில் சின்ன குளியலறை, சேர் மட்டுமே கொண்ட டைனிங் டேபிள் இருக்கின்றனர். இதனால் கடந்த சீசனை போல இந்த முறையும் இரண்டு வீடு கான்செப்ட்டில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
யார் இந்த தர்ஷிகா
பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் தர்ஷிகா போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ராதா என்ற ரோலில் நடித்து பிரபலமானார், தர்ஷிகா. இதனையடுத்து நடிகை தர்ஷிகா தற்போது பொன்னி சீரியலில் நடித்து வந்தார். அதில் அவர் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தச் சூழலில் பிக் பாஸ் எட்டாவது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் அவர் சீரியலிலிருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சனா அந்த பாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
பொன்னி சீரியலில் நடித்தது தவிர, தர்ஷிகா யாக்கை என்ற ஆடை பிராண்டின் நிறுவனரும் ஆவார். அவர் " வைப் வித் தர்ஷி " என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார் மற்றும் இன்ஸ்டாகிராமில் 132k க்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் வைத்து இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்