கேள்விகளுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் ஆர்ஜே ஆனந்தி.. விடை கிடைக்குமா? கிடைக்காதா?
பிக் பாஸ் பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆறாவது நபராக, ஆர்ஜே ஆனந்தி கலந்து கொண்டார்.

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
அதற்கான பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு எனக் கூறி வில்லத்தனமாக சிரிக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதனால், இவர் நிகழ்ச்சியை எப்படி கையாளப் போகிறார் என்பதைக் காண மக்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
பெரிய பிளானில் பிக் பாஸ்
இந்த முறை வீட்டிற்குள் இரண்டு கோடுகள் இருக்கிறது. அதனால் பெரிய பிளான் இதில் பிக் பாஸ் வைத்து இருக்கிறார். மேலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை படுக்கை அறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு படுக்கை அறை இருக்கிறது. ஒன்றில் ஷேரிங் படுக்கையும் மற்றொன்றில் இரண்டு பேர் படுத்து உறங்குவது போல் அமைக்கப்பட்டு உள்ளது.