ஆரம்பமே இப்படியா.. மகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுத்த விஜய் சேதுபதி - ஏன் இப்படி ஓரவஞ்சனை?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சனா கலந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சொல்ல போனால் நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே "யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார்.

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
யார் இந்த சச்சனா
பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சச்சனா போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.