தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு..! நிவாரண உதவி வழங்கிய மம்முட்டி, சூர்யா - ஜோதிகா, ஃபஹத் பாசில் - நஸ்ரியா தம்பதி

Wayanad landslide: வயநாடு நிலச்சரிவு..! நிவாரண உதவி வழங்கிய மம்முட்டி, சூர்யா - ஜோதிகா, ஃபஹத் பாசில் - நஸ்ரியா தம்பதி

Aug 02, 2024, 05:07 PM IST

google News
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர்கள் சூர்யா, ஃபஹத் பாசில் உள்பட திரை பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர்கள் சூர்யா, ஃபஹத் பாசில் உள்பட திரை பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர்கள் சூர்யா, ஃபஹத் பாசில் உள்பட திரை பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு பல பிரபலங்கள் உதவ முன்வந்துள்ளனர். 

தமிழ் நடிகர்கள் சூர்யா, விக்ரம், மலையாள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நஸ்ரியா மற்றும் பலர் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளனர். 

நிவாரண நிதி அளிக்கும் திரைப் பிரபலங்கள் 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவரது மேலாளர் யுவராஜ், எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். அதில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 150 பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர்  காணவில்லை பேரழிவை ஏற்படுத்திய இந்த சோகமான செய்தியால் வேதனையடைந்ததாகவும், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து வயநாடு நிவாரண நிதிக்கு ரூ.35 லட்சத்தை வழங்கினர். இதுதொடர்பாக மம்முட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தற்போது நிவாரண நடவடிக்கைகளுக்காக நான் ஒரு சிறிய தொகையை மட்டுமே அளித்துள்ளேன். தேவை ஏற்பட்டால் மேலும் பங்களிப்பேன். 

அவர்களெல்லாம் எங்களைப் போன்ற மனிதர்கள்தான். இரண்டே நாள்களில் வாழ்க்கை மாறிப்போனது. அவர்களுக்கு எங்கள் உதவி தேவை, அவர்களுக்கு உதவுவது நம் அனைவரின் கையில் உள்ளது." என்றார்

மலையாள ஸ்டார் தம்பதிகளான ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.25 லட்சத்தை வழங்கினர். இதையடுத்து, “நாங்கள் சிஎம்டிஆர்எஃப்க்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கிறோம். இந்த சுமாரான பங்களிப்பு, தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உதவும் என நம்புகிறோம். 

இந்த கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது நமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மக்களுக்காக இருக்கின்றன . நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மீட்டெடுக்க வேண்டும்" என்றனர்

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகா ஆகியோர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சமும், நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சமும் வயநாடு மீட்புக்கான நிவாரண நிதி அளித்ததுள்ளனர். கூறப்படுகிறது.

கேரளாவில் நிலச்சரிவு

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், வடக்கில் உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேற்றில் சிக்கி சுமார் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்துள்ளனர். பலரும் காணமல் போயுள்ளனர். இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர உதவி எண்

நிலச்சரிவில் சிக்கி அவசர உதவி தேவைப்படுவோர் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய இரண்டு எண்கள் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

நிலச்சரிவில் ஏராளமானோர் சி்க்கியிருக்க நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விதமாகவும், துயரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பல விடியோ காட்சிகள், புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை