தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனக்கு டைம் இல்ல.. ராம்சரண் படத்தில் நடிக்காதது ஏன்? விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனில் விஜய் சேதுபதி சொன்ன நச் பதில்!

எனக்கு டைம் இல்ல.. ராம்சரண் படத்தில் நடிக்காதது ஏன்? விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனில் விஜய் சேதுபதி சொன்ன நச் பதில்!

Divya Sekar HT Tamil

Dec 17, 2024, 01:17 PM IST

google News
ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ராம்சரணின் 16-வது படத்தை, தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு சனா இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.
ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ராம்சரணின் 16-வது படத்தை, தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு சனா இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ராம்சரணின் 16-வது படத்தை, தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு சனா இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.

விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக, படக்குழு ஆந்திரா சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் ‘நீங்கள் ராம்சரணின் 16 வது படத்தில் இருக்கின்றீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “அப்படத்தில் நான் இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, எனக்கு நேரம் இல்லை. இன்னொன்று, சில நேரம் கதை நன்றாக இருந்தாலும், என் கதாபாத்திரத்தின் வேலையென்பது அங்கு எனக்கு போதுமானதாக இல்லை என எனக்கு தோன்றியது” என கூறியுள்ளார்.

ராம்சரண் படத்தில் விஜய்சேதுபதி?

ராம்சரண் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இயக்குனர் புச்சிபாபு சனா விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். ஆகவே தன்னுடைய இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியோடு இணைந்து பணியாற்றுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அத்தகவல்களை மறுத்துள்ளார்.

விடுதலை 2

கடந்த ஆண்டு வெளியான விடுதலை 1 பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2வது பாகம் வெளியாக உள்ளது. விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்ததாக மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் பாகத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 1987 காலகட்டத்தில் நடைபெறும் இந்த கதையில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் தீவிர அரசியலை பற்றி படம் பேசுகிறது. இப்படம் பல விருதுகளையும் வென்று குவித்தது.

இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

இப்படத்தில் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பேசப்பட்டுள்ள தீவிரமான அரசியல் மற்றும் வன்முறை காரணமாக இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற 'தினம் தினமும்' பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. இளையராஜா குரலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து படக்குழு படத்தின் புரோமோ வீடியோக்களை தினமும் வெளியிட்டு வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி