’நான் எதுக்கு இத பத்தி பேசணும்’ கோட், கங்குவா பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. கடுப்பான விஜய்சேதுபதி.. வீடியோ வைரல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ’நான் எதுக்கு இத பத்தி பேசணும்’ கோட், கங்குவா பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. கடுப்பான விஜய்சேதுபதி.. வீடியோ வைரல்!

’நான் எதுக்கு இத பத்தி பேசணும்’ கோட், கங்குவா பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. கடுப்பான விஜய்சேதுபதி.. வீடியோ வைரல்!

Divya Sekar HT Tamil
Dec 17, 2024 12:11 PM IST

எனது படத்தின் ப்ரோமோஷனுக்கு நான் வரும் போது இதையெல்லாம் நான் ஏன் பேச வேண்டும்? ஒரு படம் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும், மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கப்படுகிறது என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

’நான் எதுக்கு இத பத்தி பேசணும்’ கோட், கங்குவா பற்றி கேட்கப்பட்ட கேள்வி..  கடுப்பான விஜய்சேதுபதி.. வீடியோ வைரல்!
’நான் எதுக்கு இத பத்தி பேசணும்’ கோட், கங்குவா பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. கடுப்பான விஜய்சேதுபதி.. வீடியோ வைரல்!

முதல் பாகத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 1987 காலகட்டத்தில் நடைபெறும் இந்த கதையில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் தீவிர அரசியலை பற்றி படம் பேசுகிறது. இப்படம் பல விருதுகளையும் வென்று குவித்தது.

இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

இப்படத்தில் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பேசப்பட்டுள்ள தீவிரமான அரசியல் மற்றும் வன்முறை காரணமாக இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற 'தினம் தினமும்' பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. இளையராஜா குரலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து படக்குழு படத்தின் புரோமோ வீடியோக்களை தினமும் வெளியிட்டு வருகின்றனர்.

விஜய்யின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா

படத்தின் புரமோஷனின் போது ஒரு பேட்டியில், விஜய் சேதுபதியிடம் விஜய்யின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சரியாக ஓடவில்லையே இதற்கான காரணம் என்ன என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, "எனது படத்தின் ப்ரோமோஷனுக்கு நான் வரும் போது இதையெல்லாம் நான் ஏன் பேச வேண்டும்? ஒரு படம் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும், மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கப்படுகிறது.

வெற்றியடைவதும், தோல்வியடைவதும் மக்கள் கையில்

அதனால் தான் தயாரிப்பாளர்கள் முதலீடும் செய்கிறார்கள். ஒவ்வொரு படமும் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது. இது எனக்கும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். என்னை மக்கள் ட்ரோல் கூட செய்யலாம். இது பொதுவாக நடக்கக்கூடிய ஒன்று.பல பேர் தொழில் தொடங்குகிறார்கள் ஆனால் தொழில் தொடங்கிய அனைவரும் வெற்றி பெறுவதில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.