‘கிரீன் டீ’யைத் தவிர..தவத்திற்கு ஒருவர்; தர்க்கத்திற்கு இருவர்;உரசிப் பார்த்து உண்மை காணும்’-ரஜினியை சந்தித்த வைரமுத்து
Nov 09, 2024, 10:32 AM IST
ரஜினியை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து அது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல பாடலாசிரியரான வைரமுத்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தத்திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சீராக பயணித்து வந்த வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் அவருக்கு வரும் பாடல்களின் வாய்ப்பு குறைந்தது. அத்துடன் மட்டுமல்லாமல், மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியும் முறிந்தது. பொன்னியின் செல்வன் பட விழாக்களிலும் அவர் நிராகரிக்கப்பட்டார். இதற்கிடையே அண்மையில் பாடகி சுஜித்ரா வைரமுத்து மீது மற்றொரு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பரிசாக வந்த ஷாம்பு
இது குறித்து அவர் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசும் போது, "வைரமுத்து என்னை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தபொழுது எனது பாட்டியுடன் சென்றிருந்தேன். அவர் தனியாக வரவில்லையா என்று கேட்ட போதே, அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. என்னுடைய பாட்டியும் அதனை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டார்.
இதையடுத்து என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. இதையடுத்து அவர் கர்ஷிப்பை வைத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டார்.
வெளுத்து விட்ட பாட்டி
இப்படி பாட்டி சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோதே, ஏதோ பரிசு தருகிறீர்கள் என்று கூறினீர்களே எங்கே என்று கேட்க, வைரமுத்து ஏதாவது கொடுத்து சமாளிக்க வேண்டும் என்பதற்காக, உள்ளே இருந்து இரண்டு ஷாம்பு பாட்டில்களை எடுத்து என் கையில் கொடுத்தார்.
இந்த துறையில் ஆரம்பத்தில் நான் பின்னணி பாடகர்களுடன் கோரஸ் பாடி கொண்டிருக்கும் பொழுதே, அவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அங்கு தான் நான் இது போன்ற நபர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அப்போது வைரமுத்து பற்றி அவர்கள் கூறும் பொழுது, அவருக்கு நாம் வளைந்து கொடுக்கவில்லை என்றால், அவர் சில பரிசு பொருட்களை நமக்கு தருவார்.ஒவ்வொரு பரிசுப் பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களுக்கு அந்த பொருளுக்கான அர்த்தம் நன்றாகவே தெரியும். இது என் மனதில் வந்தது.
இருப்பினும், நாங்கள் நாங்கள் அந்த ஷாம்பு பாட்டிலை வாங்கி கொண்டோம். நான் அதனை அவரது வீட்டில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விடலாம் என்று நினைத்தேன. ஆனால் என்னுடைய பாட்டிதான் வேண்டாம் பிரச்சினை பெரிதாகி விடும் என்று சொல்லி, அழைத்து வந்தார். அதன் பின்னர் அதனை நாங்கள் என்னுடைய பரிசு பொருட்களை வைக்கும் ஷோக்கேசில் வை த்திருந்தேன் வீட்டிற்கு வந்து அதைப்பற்றி கேட்கும் ஒவ்வொருவரிடமும் அதனை பற்றி நாங்கள் சொல்லி சிரிப்போம். அதன் பின்னர் ஒருநாள் நானே கோபத்தில் அதனை தூக்கி போட்டு விட்டேன்." என்று பேசினார்
டாபிக்ஸ்