தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “நீங்க சாவுங்கடா.. சாதியை வச்சு கட்டம் கட்டி.. அவ்வளவும் வன்மம்.. வைரமுத்து பசங்கலாம் என்னோட நண்பர்கள் ஆனா ” -சின்மயி

“நீங்க சாவுங்கடா.. சாதியை வச்சு கட்டம் கட்டி.. அவ்வளவும் வன்மம்.. வைரமுத்து பசங்கலாம் என்னோட நண்பர்கள் ஆனா ” -சின்மயி

Oct 19, 2024, 05:14 PM IST

google News
வைரமுத்து கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னமே கூறாதது ஏன் என்பதற்கு சின்மயி பதில் கொடுத்திருக்கிறார்.
வைரமுத்து கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னமே கூறாதது ஏன் என்பதற்கு சின்மயி பதில் கொடுத்திருக்கிறார்.

வைரமுத்து கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னமே கூறாதது ஏன் என்பதற்கு சின்மயி பதில் கொடுத்திருக்கிறார்.

பிரபல பாடகியும், தொழிலதிபருமான சின்மயி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அதில், அவர் மீடூ மூவ்மெண்ட் குறித்தும், அதில் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். 

கல்யாணம் ஆன பின்னர்தான் தைரியம் 

இது குறித்து அவர் பேசும் போது, “கல்யாணம் ஆன பின்னர்தான் பொது வெளியில் வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு வந்தது. சிறு வயதில், ஊரில் நான்கு பேரில் ஒருவராக நாமும் வாழ்ந்து விட வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். சோறு கொடுக்கிறார்களோ, இல்லையோ இதை மட்டும் கட்டாயம் சொல்லிக்கொடுத்து விடுவார்கள். அந்த மூளைச்சலவையே என்னை பல விஷயங்களை வெளியே பேச விடாமல் தடுத்து விட்டது. 

இன்று சோசியல் மீடியாவில் வசைப்பாடுபவர்கள் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. நாக்கு இருக்கிறது என்று எது வேண்டுமென்றாலும் பேசுவாய், விரல் இருக்கிறது என்று எதை வேண்டுமென்றாலும் டைப் செய்வாய்; நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? அவர்களின் கமெண்டுகள் அவ்வளவு கேவலமாக இருக்கின்றன. 

சின்மயி

கருத்து பிடிக்கவில்லையா? அந்தக் கருத்து பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப்போ…நானாவது பராவாயில்லை. சிலரை சோசியல் மீடியாவில் சிலரை சாதியை வைத்து அடையாளப்படுத்தி வசை பேச்சுக்களை பேசுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் அந்த விமர்சனங்களை விட, நான் சந்திக்கும் விமர்சனங்கள் எளிதானவையே!

வைரமுத்து

அம்மா தடுத்ததால்தான்

நான் ஒருமுறை கோயம்புத்தூர் சென்றிருந்த பொழுது, அங்கு என்னை சந்தித்த ஒரு அம்மா, நீ மட்டும் என்னுடைய பெண்ணாக இருந்திருந்தால், உன்னை நான் அதை சொல்ல விட்டிருக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். உண்மையில், அதுதான் நிஜம்; மீடூ விவாகரத்தில், இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை முன்வந்து கூறினார்கள். அதை மீடியா முன்வந்து கூறியது, நான் உட்பட இரண்டு, மூன்று பேர் தான்.

என்னுடைய அம்மாவும் தயவு செய்து இதை வெளியே கூறாதே உன்னை ஒழித்து கட்டி விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் என்று கூறினார். காரணம் என்னவென்றால், அப்போதுதான் 96 படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படத்தினுடைய பாடல்கள், டப்பிங் என அனைத்தையும் நான் செய்திருந்தேன். படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருந்தது. என்னுடைய கெரியர் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய இடத்தில் இருந்தது. ஆனால், நானும் எவ்வளவு நாள்தான் இதை மறைத்து வைத்திருக்க முடியும் என்றுதான் வெளியே கூறினேன். அதற்கு என்னுடைய பொருளாதார சுதந்திரமும் ஒரு காரணம்.

இன்று நிறைய வீட்டில் டப்பிங் தொழில் செய்து கிடைக்கும் பணத்தில் தான் அடுப்பு எரிகிறது. அதற்காக, நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு போகிறாயா? உன்னுடைய கற்பை விட, உன்னுடைய மானத்தை விட பணம் பெரியதா? இதற்கு நீ செத்து விடலாமே என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் எதற்கு சாக வேண்டும். தேவை என்றால் நீ சாவு.. யாருக்கு தெரியும் யார் யார் எப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று.. எங்களை செத்துவிடு செத்துவிடு என்று கூறுகிறீர்களே… நீங்கள் எல்லாம் சாக மாட்டீர்களா; உடன்கட்டை ஆரம்பித்து, பல காலக்கட்டங்களில் நாங்களே தான் செத்துக் கொண்டிருக்கிறோம். ஆதலால் இனி நீங்கள் சாவுங்கள்

இந்த மீடூ மூவ்மெண்டில், திரைத்துறை மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், திருநங்கை திருநம்பிகளுக்கு நடந்த துன்புறுத்தல்கள், வீட்டில் தாத்தா, அப்பா கொடுத்த கொடுமைகள் உள்ளிட்டவையெல்லாம் வெளியே வந்தது.

ஆகையால் நான் இதை பேசிக் கொண்டே இருக்கப் போகிறேன். நீங்கள் என்னை திட்ட வேண்டும் என்றால், தாராளமாக திட்டிக் கொள்ளுங்கள். ஏன் இவ்வளவு நாள் நீங்கள் வைரமுத்து பற்றி பேசவில்லை என்ற பேச்சை கேட்க முடிகிறது. முடிந்தவரை அதை தவிர்த்து விட்டு சென்றேன். காரணம் என்னவென்றால், அவர்களது வீட்டில் உள்ள அனைவரும் என்னுடைய நண்பர்கள். அவர்கள் நல்லவர்கள் தானே அதற்காகத்தான்” என்று பேசினார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி