'ஒன்றிணைந்து செயல்படுவோம்' தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதய நிதி ஸ்டாலின்!
Nov 06, 2024, 07:50 PM IST
உலக அளவில் பிரசித்த பெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகராக இருந்து வரும் அஜித்குமார் தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் உலக அளவில் பிரசித்த பெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் கூறி இருப்பதாவது,
"உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய SportsTN (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு SportsTN சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் அவர்கள் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula 4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சர்வதேச அரங்கில் எஃப்ஐஏ சாம்பியன்ஷிப்பில் கார் பந்தயத்தில் ஈடுபடும் மிகச் சில இந்தியர்களில் அஜித்தும் ஒருவராக திகழ்கிறார். அவர் 2004 ஃபார்முலா ஆசியா BMW F3 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார் மேலும் அவர் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அஜித்தின் புதிய ரேசிங் அணி பல்வேறு சர்வதேச பந்தயத் தொடர்களில் ஈடுபடும். அதன்படி @24hseries, @porsche ஐரோப்பிய சீரிஸ், 992 GT3 cup பிரிவிலும் பங்கேற்கும். திறமையான இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பும், முழு ஆதரவு அளிக்கும் பந்தயத் திட்டத்தை வழங்குவதை மிகப்பெரிய நோக்கமாக இருக்கும்" என நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் புதிய படம்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விடா முயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
அதேபோல் அஜித் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
டாபிக்ஸ்