Ajithkumar: நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மூளையில் அறுவை சிகிச்சை? நலமுடன் இருக்கும் அஜித்குமார்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அஜித்குமார் மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்களாம். மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்களாம். அவரது மூளையில் இருந்ததாக கூறப்பட்ட கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அஜித்குமார் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர் ஐசியூவில் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.