என் இடத்துல கூல் சுரேஷா..?; “எத்தன துரோகி எதிரியானாலும்” - ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு வாசன் பதிலடி!
Oct 15, 2024, 08:50 AM IST
மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நடிகர் கூல் சுரேஷ் கமிட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னை ‘மஞ்சள் வீரன்’திரைப்படத்தில் இருந்து நீக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம் டிடிஎஃப் வாசன் ஊர் சுற்றிக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தர மறுத்த காரணத்தினால்தான், அவரை படத்தில் இருந்து தூக்கினோம் என்றார்.
மேலும் வாசன் தற்போது என்னைப் பற்றி வீடியோவில் பேசி, தற்போது 3 லட்சம் வரைக்கும் அவர் சம்பாதித்து இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையே நேற்றைய தினம், அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கூல் சுரேஷ் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக கூறி வீடியோ வெளியானது. இந்த நிலையில், இதற்கு ரிப்ளை கொடுக்கும் விதமாக டிடிஎஃப் வாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், இயக்குநர் செல்அம் சந்தோஷமாக ஆடும் காட்சியையும், தன்னுடைய காட்சிகளையும் பதிவிட்டு “ எத்தனை நண்பன் துரோகி ஆனாலும், எத்தனை துரோகி எதிரி ஆனாலும் நான் தாங்குவேன்டா” என்ற மாரி படத்தின் வசனத்தை பின்னணியில் சேர்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக, மஞ்சள் வீரன் இயக்குநர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக டிடிஎஃப் வாசன் பேசினார்.
அதில் அவர், “மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். நான் அதற்காக பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கூற மாட்டேன். அவர் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிந்த காரணத்தால் நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன்.
காசு வேண்டாம்
அந்தக் காசெல்லாம் எனக்கு தற்போது திரும்ப வேண்டாம். போன் அடித்தால் அவர் எடுக்காமல் உடன் இருப்பவரை வைத்து பேச வைப்பதற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம். அதற்காகத்தான் நான் சொல்கிறேன். படத்தின் 30 சதவீத வேலைகள் முடிந்த நேரத்தில் நான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தாக பேசி இருக்கிறார். அது பொய்.
நான் பதிலடி கொடுப்பேன்
நான் கொடுத்த காசை வைத்து நீங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வாருங்கள். அது எனக்கு சந்தோசம்தான். என்னுடைய வாழ்க்கையில் என்னிடம் இருந்த நிறைய விஷயங்களை நான் இழந்து இருக்கிறேன்; எவ்வளவோ விஷயங்களில் நான் ஏமாந்து இருக்கிறேன். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகிறதோ என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை செய்த அவர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பேன்” என்று பேசினார்” என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த செல்அம், “சரியான ஆம்பளையாக இருந்தால், இங்கிருக்கும் எல்லா பத்திரிக்கை முன்னரும் வரவேண்டும். என்னுடன் அவர் நேருக்கு நேராக அமர்ந்து பேட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது உண்மை தெரியும். போனில் பேசுவது, பின்னால் இருந்து ஒளிந்து கொண்டு பேசுவது, பாம்பேவில் இருந்து கொண்டு பேசுவதெல்லாம் என்னிடம் நடக்காது. தைரியம் இருந்தால், நேரில் வா என்றைக்கு தேதி என்று சொல். அன்றைய தேதியில் நான் உன்னை நேருக்கு நேராக சந்திக்கிறேன்” என்றார்.
டாபிக்ஸ்