பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
Oct 18, 2024, 06:22 PM IST
முக்கிய சினிமா செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தித் தொகுப்பில், சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி முதல் என தளபதி 69 அப்டேட் வரை நடந்த முக்கிய சினிமா செய்திகள் குறித்து காணலாம்.
சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி
சூர்யா 45 படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குவதாகவும், படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் சோசியல் மீடியாக்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார் என்றும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும், படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே (57) காலமானார். நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர், "ஜிந்தகி 50 50", "லவ் ரெசிபி", "கட்டா மிட்டா", "கல்கத்தா மெயில்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கினார்.
புகழின் மகள் சாதனை
குக் வித் கோமாளி புகழின் மகள் ரிதன்யா. 1 வயதே ஆன ரிதன்யா, தனது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 17 வினாடிகளில் 2 கிலோ டம்புளை இடைவிடாமல் பிடித்துக் கொண்டு சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் இவ்வளவு திறமை காட்டியதால், ரிதன்யாவிற்கு பல்வேறு துறைகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சாதனையை பார்த்து மகிழ்ந்த புகழ் – பென்ஸி தம்பதியினர், மகள் ரிதன்யாவின் திறமையை உலகிற்கு காட்டியதற்கு பெருமிதம் அடைந்துள்ளனர்.
கங்குவா ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி,பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.
தளபதி 69 அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. அண்மையில் கிடைத்த தகவல்படி விஜய் இப்படத்தில் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல் பரவி வருகிறது.
வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம் . இந்தப் படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் , பகத் பாசிலைப் பார்த்து "பேட்ரிக் சார் நீங்க ரொம்ப நல்லா நடிகிறீங்க என்று சொல்ல அதற்கு பகத் பாசில் உங்களவிடவா என்று சொல்ல மிக நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடிடியில் வெளியாகும் லப்பர் பந்து - இந்தியாவில் பார்க்க முடியாது
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரமும் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் வருகிற 18 ஆம் தேதி முதல் சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆனால் இது இந்தியாவை தவிர உள்ள மற்ற மாநிலங்களில் மட்டுமே ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ்
வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது, எந்த ஓடிடி நிறுவனம் எவ்வளவு விலைக்கு கொடுத்து படத்தை வாங்கியுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி படங்களை அமேசான் நிறுவனம் வாங்கி வருகிறது, அவ்வாறு பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட ஜெயிலர் படம் அமேசானுக்கு பெரிய அளவிலான லாபத்தை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தை ரூ. 90 கோடி கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
வெற்றிமாறன் உடன் இணைகிறாரா ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு நேர்காணலில் பேசிய அவர்” அடுத்தடுத்த படங்களைப் பற்றி பேசும்போது "எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. இயக்குனர்களிடம் சென்று நாம் ஒரு படம் பண்ணலாம் என சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது வெற்றிமாறன் சாரிடம் நானாகவே சென்று ஒரு படம் பண்ணலாம் என சொல்லியுள்ளேன். அவர் தன்னுடைய கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு கண்டிப்பாக பண்ணலாம் எனக் கூறியிருக்கிறார்.
நடிகர் அஜித்- இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணி
நடிகர் அஜித்- இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்கள் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தன. இந்த நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக இயக்குநர் சிறுத்தை சிவா கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து நடிகர் அஜித்தே அறிவிப்பார் எனவும் கூறி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்