விஜய் சேதுபதி மகன் நடித்த ஃபீனிக்ஸ் வீழான்.. குட் பேட் அக்லி படத்தில் அஜித் லுக்.. வேட்டையன் 2 ஆம் நாள் வசூல்!
Top Cinema News : விஜய் சேதுபதியின் மகன் நடித்த ஃபீனிக்ஸ் வீழான், குட் பேட் அக்லி படத்தில் அஜித் லுக், வேட்டையன் 2 ஆம் நாள் வசூல் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்!

வேட்டையன் 2 ஆம் நாள் வசூல்
வேட்டையன் திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் சுமார் 28 கோடி வசூல் செய்திருந்தது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக வேட்டையின் திரைப்படத்தில் இரண்டாவது நாள் வசூல் 50 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் 120 கோடி வசூலை வேட்டையன் திரைப்படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லெவன் முதல் சிங்கிள் பாடல்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் 'லெவன்'. இன்று அந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்த அந்த பாடலை பிரபல நடிகை மற்றும் பாடகியான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். படத்தின் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸின், இந்த பாடல் வரிகளை முழுமையாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை முன்னணி இசை நிறுவனமான சரேகாமா வெளியிட்டுள்ளது.
"பவர் லட்டு" ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்
பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்திற்கு "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார். இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த "முன்தினம்" படத்தை தயாரித்து இயக்கினார்.வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர். அதுமட்டுமின்றி செந்தில் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.