தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம்..இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பாடகர்! யார் இவர்?

ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம்..இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பாடகர்! யார் இவர்?

Nov 13, 2024, 03:53 PM IST

google News
பகுதி நேர பாடகராக இருந்தாலும், டாப் பின்னிணி பாடகர்களான அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல், சுனிதி செளரகான், சோனு நிகாம் ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளம் பெறுகிறார் இந்த பாடகர். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வாங்கும் இந்த பாடகர் யார் என்பதை பார்க்கலாம்.
பகுதி நேர பாடகராக இருந்தாலும், டாப் பின்னிணி பாடகர்களான அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல், சுனிதி செளரகான், சோனு நிகாம் ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளம் பெறுகிறார் இந்த பாடகர். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வாங்கும் இந்த பாடகர் யார் என்பதை பார்க்கலாம்.

பகுதி நேர பாடகராக இருந்தாலும், டாப் பின்னிணி பாடகர்களான அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல், சுனிதி செளரகான், சோனு நிகாம் ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளம் பெறுகிறார் இந்த பாடகர். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வாங்கும் இந்த பாடகர் யார் என்பதை பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் ஏராளமான பாடகர்கள் இருந்தாலும், சிலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை பெற்றவர்களாக இருக்கிறார்கள். 1950களில் தொடங்கி தற்போது வரை ரசிகர்கள் மனதில் ரீங்காரமிடும் பாடகர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என தகவல் புதிரான விஷயமாகவே இருந்து வருகிறது.

ஒரு சில பாடகர்கள் தங்களது சினிமா கேரியரில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்கள். தங்களது தாய் மொழியை கடந்த பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடி புகழ் பெற்றவர்களாகவும் இருந்துள்ளார்கள். அந்த வகையில் பகுதி நேர பாடகராக இருக்கும் ஒருவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

இந்தியாவின் காஸ்ட்லியான பாடகர்

இந்திய சினிமாக்களை பாலிவுட், தென்னிந்தியா, போஜ்புரி என பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் சில பாடகர்கள் டாப் சிங்கராக இருந்து வருகிறார்கள். அத்துடன் ஒரு சில ஒட்டுமொத்த மொத்த இந்தியாவின் குரலாக ரசிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தியர்களால் அதிக ரசிக்கப்படும் குரலாகவும், பாடகராகவும் இருப்பவர் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இவர்தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகராகவும் இருந்து வருகிறாராம். இவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, இந்திய சினிமாக்களில் பாடல் பாடும் ஒரு முன்னணி பாடகர் பெறும் சம்பளத்தை விட 12 முதல் 15 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளரான இவர், இசையமைப்பு, கம்போசிங் ஆகியவற்றுக்கு அதிக நேரத்தை செலவழிப்பதுடன், பெரும்பாலும் தனது இசையமைப்பில் மட்டுமே பாடல்களை பாடுகிறார். ஆனால் வேறொரு இசையமைப்பாளருக்கு இவர் பாட வேண்டுமென்றால் பெரும் தொகை சம்பளமாக கொடுக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் சில ஆல்பம் பாடல்கள், இந்தி பாடல்கள் வேறு இசையமைப்பாளருக்கு பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

அதிக சம்பளம் பெறும் பிற பாடகர்கள்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முழுநேர பாடகர்களில் முன்னிலையில் இருப்பவர் கொல்கத்தா சேர்ந்த பான் இந்தியா பாடகியான ஸ்ரேயா கோஷல். 40 வயதாகும் இவர் ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பெறுகிறாராம். ஸ்ரேயாவைத் தொடர்ந்து அவரது சமகால பாடகியான சுனிதி செளகான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஒரு பாடலுக்கு ரூ.18-20 லட்சம் பெறுகிறார். இதே அளவிலான சம்பளத்தை பாடகர் அரிஜித் சிங்கும் பெறுவதாக கூறப்படுகிறது.

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் நிகாம் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார். இவர் ரூ.15-18 லட்சம் பெறுகிறாராம்.

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள்

ஏ.ஆர். ரஹ்மான் படங்கள்

முதல் ஆஸ்கர் விருதை வென்ற இந்தியன் என்ற பெருமை பெற்றவரான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த ஆண்டில் இதுவரை இவரது இசையமைப்பில் அயலான், லால் சலாம், ராயன், மலையாளத்தில் ஆடுஜீவிதம், இந்தியில் மைதான், அமர் சிங் சம்கிலா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப், பாலிவுட் படங்களான கமல் ஆர் மீனா, சாவா உள்பட மேலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை