STORY OF SONG KADAL RASA: முதலில் பாடிய வேறு பாடகர்..! ஏ.ஆர். ரஹ்மான் - யுவன் காம்போவின் ஹிட் பாடல்..கடல் ராசா சீகரெட்
Story of Song Kadal Rasa: ஏ.ஆர். ரஹ்மான் - யுவன் காம்போவின் ஹிட் பாடல் ஆக இருக்கும் கடல் ராசா பாடலை முதலில் வேறு பாடகர் பாடியுள்ளார். ஆனால் அந்த பாடலில் யுவன் எப்படி வந்தார் என்கிற சீகரெட்டை தெரிந்து கொள்ளலாம்.
தனுஷின் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய முக்கியமான படங்களில் ஒன்றாக மரியான் படம் உள்ளது. பரத் பாலா இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ், பார்வதி ஆகியோர் இணைந்து நடித்திருப்பார். படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பார்.
இந்த படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹி்டடாகி. குறிப்பாக தனுஷ் பாடிய கடல் ராசா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றதுடன் இப்போது பலரது ப்ளேலிஸ்டில் தவறாமல் இடம்பெறும் பாடலாக இருந்து வருகிறது.
இந்த பாடலை யுவன் பாடுவதற்கு முன்னாள் ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருந்தது பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. ஆனால் இந்த பாடலை மற்றொரு பிரபல பாடகரும் பாடி, செட் ஆகாமல் இருந்துள்ளது. பின்னர்தான் யுவன் பாடி தற்போது நாம் ரசிக்கும் வெர்ஷன் வந்துள்ளது.
இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா தான் பாட வேண்டும் என முடிவு செய்தது ஏ.ஆர். ரஹ்மான் என்று தனுஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார். கடல் ராசா பாடலை முதலில் ஏ.ஆர். ரஹ்மானே தனது குரலில் டம்மியாக டிராக் பாடியிருந்தார். இதைக் கேட்ட படத்தின் இயக்குநர் பரத் பாலாவும் நன்றாக இருப்பதாக கூறி, அவரையை பாடலை பாடுமாறு கூறியுள்ளார்.
இருப்பினும் ஏதோ மிஸ் ஆவதாக உணர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என கூற அவரை பாட வைத்துள்ளார்.
கடல் ராசா பாடல் பற்றி ஏ.ஆர். ரஹ்மான்
தனுஷ் ஆப்பரிக்காவில் ஷுட்டிங்கில் இருந்தார். அதற்கு முன்னர் கடல் ராசா பாடலை எழுதி கொடுத்தார். இந்த பாடல் வேண்டும் என உடனடியாக கேட்டார்கள். ஷுட்டிங்கில் பயன்படுத்துவதற்காக கேட்டதால் உடனடியாக எனது குரிலில் பாடி கொடுத்தேன். இதை வைத்து பரத் பாலாவும் ஷுட் செய்தார்.
நான் அதை பார்த்தபோது என் குரல் தனுஷுக்கு மேட்ச் ஆகவில்லை. அதன் பின்னர் இன்னொரு பாடகரை பாட வைத்து அதுவும் பொருந்தவில்லை. தனுஷுக்கு நிறைய பாடல்கள் பாடிய யுவன் பொருத்தமாக இருப்பார் என கருதி அவரை பாட வைத்தோம். ஒரே நாளில் இரவில் அந்த பாடலை பாடிகொடுத்தார். மறு நாள் காலையில் பைனல் டிராக்கை முடித்தோம் என கடல் ராசா படால் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடல் ராசா படாலை பாடிய இன்னொரு பாடகர்
"கடல் ராசா பாடலை பாடியது சித் ஸ்ரீராம் தான். ஆனால் எதோ ஒரு இடத்துல ஏஆர் ரஹ்மான் சொன்ன ஈரம் அந்த பாட்டுல இல்ல. கடலோட சம்மந்தப்பட்ட அந்த குரல்வளம் அதுல இல்லை என்பதை இருவரும் நினைத்தோம். இதைப்பத்தி ரஹ்மானிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன்.
பின்னர் யுவன் இந்த பாடலை பாடியது சர்ப்ரைசான விஷயம்தான். திடீருனு ஒருநாள் ரெக்கார்ட் பண்ண ரஹ்மான் அழைத்தார். அங்கு யுவன் இருந்தார். முழு ராத்திரியில யுவன் எளிமையா அதை பாடி கொடுத்தார். தனுஷ் எழுதி, யுவன் பாடிய அந்த பாடல் ரஹ்மானுக்கு சிறப்பாக அமைந்தது என படத்தின் இயக்குநர் பரத் பாலா கடல் ராசா உருவா விதம் குறித்து பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒரு பாடகராக நல்ல அனுபவம்
கடல் ராசா பாடல் வெளியான சமயத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்த்து. அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன், "நாங்கள் என்டர்டெயின் செய்ய இருக்கிறோம். எனக்கு எந்த விதமான ஈகோவும் கிடையாது. தனியா பிறக்கிறோம், தனியா போறோம். எதையும் எடுத்துட்டு போகபோறதில்லை. எப்படி வாழ்றோம் என்பது தான் முக்கியம்.
அவர் என்னை கூப்பிட்டு, பாடுறீங்களா என கேட்டார். கண்டிப்பாக என சொல்லிவிட்டு போய் பாடி முடித்தேன். இரவு 10 மணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சென்று, ஒரு பாடகராக ட்யூன் கேட்டு பாடி முடித்தேன். நல்ல அனுபவமாக இருந்தது" என்று கூறினார்.
மரியான படத்தில் இடம்பிடித்த கடல் ராசா பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருதை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கைகளால் வாங்கினார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்