“இரண்டு ஆஸ்கர்களை வென்றேன்..இப்ப எவனும் கண்டுக்க மாட்றான்..டைரக்டர்கள் தப்பா வழி நடத்துறாங்க” - ஏ.ஆர்.ரஹ்மான்
வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் திட்டங்களை மட்டுமே செய்ய விரும்புகிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறினார்.

1992 ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கி வெளியான ' ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ. ஆர். ரஹ்மான். அதன் பின்னர் பல்வேறு மொழிகளில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான slumdog millionaire படத்திற்கு இசையமைத்து இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். தற்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு பாடல்களை வழங்கி வரும் ரஹ்மான் தற்போது வீக் நாளிதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது "இனியும் என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது நான் என்னுடைய படைப்பு சார்ந்த உள்ளுணர்வுகளை திருப்தி படுத்தும் படைப்புகளை மட்டுமே தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன்.நான் பல வருடங்களுக்கு முன்னதாக ஆஸ்கர் விருதுகளை வென்றேன். இப்போது யார் அதனை பற்றி அக்கறை கொள்கிறார்கள். யாரும் அதனை கண்டு கொள்வதில்லை..
அடுத்த தலைமுறையை...
நான் எனக்கு நெருக்கமான திரைப்படங்களில் பணியாற்றி, அடுத்த தலைமுறையை உத்வேகப்படுத்தக் கூடிய இசையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தற்போது என்னை நிரூபித்தே ஆக வேண்டிய அவசரம் இல்லை. வயது ஆக ஆக எனக்கு சகிப்புத் தன்மை குறைகிறது.