தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டிய விவகாரம்.. தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் செய்யத் தடை!

தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டிய விவகாரம்.. தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் செய்யத் தடை!

Divya Sekar HT Tamil

Oct 24, 2024, 08:39 AM IST

google News
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (irfansview)
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தன் மனைவி மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை பிரபல யூட்யூபர் இர்ஃபான் கத்திரிக்கோலால் வெட்டி, அதனை வீடியோவாகப் பதிவுசெய்து, தனது யூட்யூபில் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் டெலிவரியை தனது யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதுபோல உள்ளது. அதுவும் மருத்துவரே, கத்திரிக்கோலை இர்ஃபானிடம் கொடுக்கிறார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், சர்ச்சையாக மாறியுள்ளது.

இணை இயக்குநர் இளங்கோவன் புகார்

இந்தநிலையில், யூடியூபில் வெளியான வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை சார்பில் நேற்று முன்தினம் இர்ஃபானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இர்ஃபான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, இர்ஃபான் தனது சமூக வலைதளப்பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார். இந்தசூழலில், யூடியூபர் இர்ஃபான் மற்றும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார்.

இர்ஃபானை மன்னிக்க முடியாது

இதனிடையே குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்ஃபானை மன்னிக்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது. தற்போது இர்ஃபான் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்

பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்; புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. மருத்துவமனைக்கு முதல்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தவிட்டார்.

சர்ச்சையில் சிக்கிய இர்பான்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆலியா கர்ப்பாகி இருப்பதை யூடியூப் விடியோ மூலம் தொரிவித்திருந்தார் இர்பான். அதைத்தொடர்ந்து சில வாரங்கள் கழித்து தனது பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் குறித்து குடும்பத்தினர் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அறிவித்தார். அதையும் விடியோவாக பகிர்ந்து லைக்குகளை குவித்தார்.

குழந்தை பாலினம் குறித்து இர்ஃபான் வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இந்தியாவில் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துகளும், வாதங்களும் முன் வைக்கப்பட்டன.

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி