மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்

மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்

Marimuthu M HT Tamil
Oct 23, 2024 12:10 AM IST

மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்

மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்
மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்

இதுதொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இர்ஃபானை பொறுத்தவரை ஆளும்கட்சியின் செல்லம். ஆளுங்கட்சி தான் இவரது எல்லாத் தவறுக்கும் காரணம். முதல் நிகழ்வு, அவரே எல்லா சுங்கச் சாவடிகளிலும் கார் ஓட்டிக்கொண்டு அவரே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு வரும்போது, வண்டி ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்.

அப்போது பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு செய்யும் ஒரு வயதான மூதாட்டி, அந்தம்மா ஸ்பாட்டிலேயே அவரது கார் மோதி அடிபட்டு இறந்துவிடுகிறார். அப்போது மக்கள் எல்லோரும் துரத்துறாங்க. அந்தம்மாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்கணும். ஆனால் அங்கு அவர் நிற்கக் கூட இல்லை. காரை எடுக்கல. ஏனென்றால், மக்கள் தடுத்து நிறுத்திட்டாங்க. உடனே, வேறு காரில் ஏறி சென்றுவிட்டார்.

விபத்தில் உதவிய போலீசார்:

இதை மறைமலை நகர் காவல் ஆய்வாளர், போக்குவரத்து துறை ஆய்வாளர், அதையும் தாண்டி அந்த ஏரியா ஏ.சி ஸ்பாட்டுக்கு வந்து அந்த ஃபுட்டேஜ் எல்லாத்தையும் அழிக்கிறார். இன்றைக்கு வரைக்கும் வழக்காகப் பதிவுசெய்து, அதில் இர்ஃபான் மீது தண்டனை கிடைக்கவே இல்லை. மனிதாபிமான அடிப்படையில் இறந்துபோன தலித் மூதாட்டிக்கு இழப்பீடு கொடுக்கல. இவர் நான் ஓட்டல, என் டிரைவர் ஓட்டினார்னு சொல்றார்.

எப்போதுமே பணம் படைத்தவர்கள் எல்லோரும் அப்படி தான் சொல்வாங்க. இது பெரிய சர்ச்சையாக மாறியபிறகு, திமுகவில் ஒரு பெரிய பெண் தலைவரைப் பார்த்து கையைக் காட்டுகிறார். அந்தம்மா தான் இவருக்கு நெருக்கம். அவர் தான் உடனடியாக காவல் துறையை அனுப்பியவர் என்ற சர்ச்சை இருக்கிறது. சம்பவம் நடக்காத மாதிரி தப்பிட்டார், இர்ஃபான். இது அவரது அரசியல் தொடர்புக்குப் பின்னால் உள்ள விஷயம்.

அதனைத் தொடர்ந்து, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை துபாயில் சென்று பார்க்கிறார். இதை அவர் வீடியோவாகப் பதிவிடுகிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும், அயல்நாட்டில் சென்று பார்க்கிறார்.

பெண்கள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கும் சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தது. இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை அறிவதற்குத் தடை விதிக்க என்ன காரணம் என்றால், இது மாதிரியான பிரச்னை இருப்பதை அறிந்து தான். இர்ஃபான் என்ன சொல்கிறார். துபாய் போனால், குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்துகொள்ளலாம் என வழிகாட்டுகின்றார். அதை ஒரு மில்லியன் பேர் பார்க்கிறார்கள். இதன்மூலம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் சட்டத்தை இர்ஃபான் மீறியிருக்கிறார்.

அமைச்சர் மருத்துவமனைக்கு சீல் வைத்திருக்க வேண்டாமா?: தமிழா தமிழா பாண்டியன்!

அடுத்து அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கு. ஜவுளிக் கடையில் ரிப்பன் வெட்டி திறப்புவிழா நடத்துறது மாதிரி, தொப்புள் கொடியை வெட்டியிருக்கார். தவறு செய்பவர்களும் தவறினை வழிநடத்துபவர்களும் ஒன்று தான்.

இப்போது என்ன சொல்கிறார்கள், போலீஸ் தற்போது தேடும்போது ஜப்பானில் இருக்கிறார். இவர் கடத்தல் பேர் வழின்னு சொல்றாங்க. நீங்கள் எங்கு போனாலும் நகையை வாங்கிக்கொண்டு போட்டுட்டு வரலாமே. காவல் துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை இர்ஃபானை ஆராயணும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த மருத்துவமனையை சீல் வைத்திருக்க வேண்டாமா?. தன் மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்க அனுமதித்து, பிரசவம் பார்க்க குறைவான கட்டணம் கேட்ட மருத்துவமனையில் தன் மனைவியை அனுமதித்திருக்கிறார், இர்ஃபான். அது தான் சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனை. மருத்துவர் நிவேதா இதை அனுமதிச்சிருக்காங்க. அவரது மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்யணும். மருத்துமனையை சீல் வைக்கணும். இர்ஃபான் விவகாரத்தில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்கிறேன்.

அந்த வீடியோவை உலகம் முழுக்க பார்த்திட்டான் இல்லையா. இனிமேல் எல்லோரும் தொப்புள்கொடியை கட் செய்ய கிளம்பிவிடுவார்கள். மனநோயாளிகள் நிறைந்த நாடு, இந்தியா. இர்ஃபான் ஜாலியாக இருக்கிறார்.

நயன்தாரா விவகாரத்தில் நடந்தது இது தான்:

நயன்தாரா விவகாரத்தை எடுத்துக்கொண்டால், சட்டப்படி ஒரு பெண் இரண்டு முறை கருவுற்று கரு சிதைந்து இருந்து,அடுத்து கருவுற முடியாமல் இருந்தால் தான், வாடகைத் தாய் மூலம் சட்டத்தில் கருவுற அனுமதியிருக்கிறது. அப்படியிருக்கையில், ஆளுங்கட்சியின் செல்வாக்கினால், முன்பே இருமுறை கருவுற்று கருச்சிதைவுக்கு நயன் ஆளாகியிருப்பதாக ஆவணங்கள் தரப்படுகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு கேட்பதற்கு நாதி கிடையாது. தண்டனை மட்டும் உடனடியாக கிடைக்கும்.

பிரசவ வேதனை பெண்களுக்கு மூன்று மணிநேரம் இருக்கும் என்கிறார்கள். ஒரு பெண் வேதனையில் இருக்கும்போது இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டிக் கொண்டாடுகிறார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். அதைத் தாண்டியும் சில வீடியோக்கள் வெளியில் வரும். அனஸ்தியா கொடுப்பதை வீடியோ எடுத்திருப்பார். அறுவை சிகிச்சை செய்ததை வீடியோ எடுத்திருப்பார். இதை அனுமதித்த டாக்டர் நிவேதாவை விசாரிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது எல்லாம் இரண்டு தவறு. இவருக்கெல்லாம், இரட்டை ஆயுள் தரணும். இவ்விவகாரத்தில் பொதுமக்களுக்கு அரசின் மீது தான் கோபம் இருக்கிறது’’ என்கிறார்.

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.