Goat Box Office: 22 நாளில் கல்லா கட்டினாரா விஜய்? - மொத்தமாக கோட் பட வசூல் இது தான்!
Sep 27, 2024, 01:45 PM IST
Goat Box Office: 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை தி கோட் படம் வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
Goat Box Office: நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் ஆரவாரத்திற்கும் கொண்டாட்டங்களுக்கும் மத்தியில் வெளியான திரைப்படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை தி கோட் படம் வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் கேரியரில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும்.
இது விஜய்யின் 68 ஆவது படம். இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
படக்குழு
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
பட கதை என்ன?
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
நிறைய கேமியோ
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சிவகார்த்திகேயன் போலவே, அஜித், விஜயகாந்த் என பல்வேறு மாஸ் ஸ்டார்களின் உள்ளடக்கங்கள், இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகையும், படத்திற்கு தேவையான இடங்களின், தேவையான சூழலில் வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. முடிந்த வரை, அந்த கதாபாத்திரங்களுக்கு சிறப்பு செய்யவும் முயற்சித்திருக்கிறார்.
வெறுமனே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களயைம் கவரும் விதமாக, திரைக்கதையில் இந்த கதாபாத்திரங்களை சேர்க்க, மெனக்கெட்டிருக்கும் வெங்கட்பிரபு, அதற்காக முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறார். அதே போல, த்ரிஷாவும் ஒரு பாடலில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ஆட்டம் போடும் விதமாக அந்த காட்சியும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்