Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?-the greatest of all time movie box office collection on day 21 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?

Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?

Aarthi Balaji HT Tamil
Sep 26, 2024 12:39 PM IST

Goat Box Office: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 21 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?
Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?

தி கோட் பட கதை

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதி கதை. மொத்தத்தில் கோட் திரைப்படம், நிறைய கேமியோ ரோல்களால் நிரம்பியிருக்கிறது என்றே சொல்லலாம்.

நிறைய கேமியோ

சிவகார்த்திகேயன் போலவே, அஜித், விஜயகாந்த் என பல்வேறு மாஸ் ஸ்டார்களின் உள்ளடக்கங்கள், தி கோட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகையும், படத்திற்கு தேவையான இடங்களின், தேவையான சூழலில் வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. முடிந்த வரை, அந்த கதாபாத்திரங்களுக்கு சிறப்பு செய்யவும் முயற்சித்திருக்கிறார்.

வெறுமனே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களயைம் கவரும் விதமாக, திரைக்கதையில் இந்த கதாபாத்திரங்களை சேர்க்க, மெனக்கெட்டிருக்கும் வெங்கட்பிரபு, அதற்காக முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறார். அதே போல, த்ரிஷாவும் ஒரு பாடலில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ஆட்டம் போடும் விதமாக அந்த காட்சியும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம், விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரசாந்த், பிரபு தேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தி கோட் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

விஜய்யின் கடைசி படம்

விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டு சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். தி கோட் அவரது இறுதி திட்டமாக இருக்கலாம் என்று சிலர் கவலைப்பட்ட நிலையில், அவர் மேலும் ஒரு படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அவரது 69 ஆவது படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிகர் 'ஜனநாயகத்தின் ஜோதி தாங்குபவராக' நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.