Box OfficeToday: சண்டைக்கு நின்ற சின்ன படங்கள்.. வசூலில் பிரேக்கை போட்ட விஜய்.. இவ்வளதான் லாபமா? - கோட் வசூல் இங்கே!
Box OfficeToday: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி வெளியான கோட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்

நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் “கோட்”. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத்திரைப்படம் பெரும்பான்மையான மக்களுக்கு பிடித்த காரணத்தால், பாக்ஸ் ஆபீஸிலும் சொல்லும் படியான வெற்றியை பெற்று இருக்கிறது. நேற்றோடு 2 வாரங்களை கடந்திருக்கும் இந்தப்படம், வாரத்தின் முதல் நாளில், வசூலில் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.
வசூல் எவ்வளவு?
Sacnilk தளம் வெளியிட்ட தகவலின் படி, நேற்றைய தினம் கோட் திரைப்படம் வெறும் 1.15 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 386 கோடி பட்ஜெட்டில் உருவான இந்ததிரைப்படம், மொத்தமாக நேற்றோடு இந்தியாவில் 244.50 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. செம்டம்பர் 23ம் தேதியான நேற்றைய தினம் இந்தப்படத்தை தமிழில் 17.21 சதவீத மக்களும், ஹிந்தியில் 7.74 சதவீத மக்களும் பார்த்திருக்கிறார்கள். உலகளவில் பார்க்கும் போது, கோட் திரைப்படம் 444 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது. கடந்த வாரம் வெளியான ‘லப்பர் பந்து’ ‘நந்தன்’ உள்ளிட்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கோட் படத்தின் வசூல் இனி நன்றாக குறையத்தொடங்கும் என்றே தெரிகிறது.
என்ன கதை?
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.