தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தளபதி 69 உண்மையிலேயே ரீமேக் தானா? விஜய் தான் தமிழ் சினிமாவின் பாலைய்யாவா? என்னைய்யா சொல்றீங்க?

தளபதி 69 உண்மையிலேயே ரீமேக் தானா? விஜய் தான் தமிழ் சினிமாவின் பாலைய்யாவா? என்னைய்யா சொல்றீங்க?

Nov 29, 2024, 02:35 PM IST

google News
தளபதி 69, தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் காப்பி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் உரிமையை படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
தளபதி 69, தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் காப்பி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் உரிமையை படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

தளபதி 69, தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் காப்பி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் உரிமையை படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

தளபதி 69 விஜய்யின் கதாப்பாத்திரம் என்ன?

சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால், நடிகர் விஜய்யின் இந்தப் படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தியே நகரும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளார் எனக் கூறி வருகின்றனர். 

ஏற்கனவே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும், வலிமை படத்தில் அஜித்தையும் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து மிரட்டி இருப்பதால், ஹெச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தில் அவரை போலீஸ் அதிகாரியாகவே நடிக்க வைப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி 69 பூஜை

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜைகள் முடிந்து, படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரவுவதால், ஒருவேளை தளபதி 69 படத்தில் விஜய் போலீசாகத்தான் நடிக்க உள்ளாரோ என பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.

தெலுங்கு படத்தின் ரீமேக்கா?

ஏற்கனவே, விஜய் எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்? படத்தின் கதை என்ன? படத்தில் நடிக்க உள்ள அத்தனை நடிகர்களும் எப்படி பயன்படுத்தப்பட உள்ளனர்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்த நிலையில், சில நாட்களாகவே தளபதி 69 படத்தை சுற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது.

அரசியலில் களமிறங்க உள்ள விஜய் தன் ரசிகர்களைக் கவர கடைசிப் படத்தை மிகவும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டும் என நினைத்த நிலையில், அவர் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

பகவந்த் கேசரி ரீமேக்

தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் கதை தான் தளபதி 69 என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது படக்குழுவினரிடமிருந்தே வந்த தகவல் என்றும், இதற்காக தளபதி 69 தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விளக்கமளிக்காத படக்குழு

இவ்வாறு வெளியான தகவல்களால், மக்கள் இது உண்மையான தகவலாக இருக்குமோ என யோசித்து வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக படக்குழுவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

மக்களை கவர்ந்த இயக்குநர்

சதுரங்க வேட்டை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அ. வினோத். அப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இவரது அணைத்து படங்களும் திருட்டு, பணம் சார்ந்த கார்ப்பரேட் சுரண்டல் போன்ற கருக்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட படங்களாக இருந்தன.

இதனால், அரசியலுக்கு வரும் விஜய்க்கு மக்களை கவரும் விதமாக இதேபோன்று ஒரு படத்தைத்தான் வினோத் கூறி இருப்பார் என்றும் ஒருதரப்பு கூறி வருகிறது.

தளபதி 69 நடிகர்கள்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜூ ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படமே விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி