தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Telugu Actor Nani And Sai Pallavi Starrer Shyam Singha Roy In Race For Oscar Nominations

இந்தியாவுக்கான ஆஸ்கர் தேர்வு ரேஸில் ஷாம் சிங்கா ராய்!

Aug 17, 2022, 11:21 PM IST

நானி - சாய் பல்லவி நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான ஷாம் சிங்கா ராய் இந்தியாவுக்கான ஆஸ்கர் தேர்வு ரேசில் மூன்று பிரிவுகளில் கீழ் அனுப்பப்பட்டுள்ளது.
நானி - சாய் பல்லவி நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான ஷாம் சிங்கா ராய் இந்தியாவுக்கான ஆஸ்கர் தேர்வு ரேசில் மூன்று பிரிவுகளில் கீழ் அனுப்பப்பட்டுள்ளது.

நானி - சாய் பல்லவி நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான ஷாம் சிங்கா ராய் இந்தியாவுக்கான ஆஸ்கர் தேர்வு ரேசில் மூன்று பிரிவுகளில் கீழ் அனுப்பப்பட்டுள்ளது.

திரைத்துறையில் உலக அளவில் மிகப் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் கடந்த ஆண்டில் பல்வேறு புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பிற மொழிப் படங்கள் ஆஸ்கர் வெல்வதற்கான வாய்ப்புகள் மேலும் உருவாகியுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Pushpa2FirstSingle: 3 வருஷ உழைப்பு; பழங்குடியினர் கெட்அப்;டானாக புஷ்பா -நாளை மாஸாக ரிலீஸாகும் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

NagaChaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!

The GOAT: ‘தி கோட் படத்தின் 2வது பாடல் இப்படி இருக்கும்.. படம் இதைத்தான் சொல்லும்..’: நடிகர் அஜ்மல் சொன்ன ரகசியம்

Kurangu Pedal: 'டயர் ஓட்டுதல், நீச்சல், சிலம்பம்': 90ஸ் கிட்ஸ் ஆடிய விளையாட்டுக்களின் குவியல் 'குரங்குபெடல்’ ட்ரெய்லர்!

இதையடுத்து ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டில் இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்து அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு படங்கள் தங்களது படங்களை அனுப்பவதற்கான கடைசி நாள் நவம்பர் 15 ஆகும். 

தற்போது இதற்கான இறுதி நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே மீதமுள்ள நிலையில், இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரைப்படங்களில் ஆஸ்கருக்கு அனுப்ப தகுதியானவை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதாமே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான ஷாம் சிங்கா ராய் இந்தியாவுக்கான ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடைே இந்தப் படத்தை ஏன் ஆஸ்கர் தேர்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அடுக்கடுக்கான காரணங்களையும் ரசிகர்கள் பட்டியலிட்டு வருகிறார்கள்.

நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டீன் உள்பட பலர் நடித்துள்ள ஷாம் சிங்கா ராய் மறுஜென்மம் கதையம்சத்தை கொண்டு, 1970களின் பின்னணியில் எடுக்கப்பட்ட பிரீயட் படமாகும். தேவதாசி முறையை பற்றியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அமைந்திருந்த படத்தின் கதையம்சம், படத்தில் இடம்பெறும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தை ராகுல் சங்கிரித்யான் இயக்கியிருந்தார்.

இதையடுத்து ஷாம் சிங்கா ராய் படத்தை சிறந்த பீரியட் படம், சிறந்த பின்னணி இசை. சிறந்த பாரம்பரிய கலாச்சரத்தை பறைசாற்றும் இந்திய படம் என மூன்று பிரிவுகளின் கீழ் பிரிந்துரை செய்யுமாறு அனுப்பப்ட்டுள்ளது.

இதில் இந்தப் படம் தேர்வாகும்பட்சத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படும்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.