சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு
Dec 12, 2024, 10:17 AM IST
சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் பேட்டியைக் காணலாம்.
சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.
ரஜினியின் நட்பு பற்றி, அவரது கல்லூரித்தோழனும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் டெய்லி கல்ச்சர் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’1982ல் லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை எனது தாயின் பெயரில் தொடங்கினேன். அதை எங்கள் அண்ணன் என்.டி.ஆர் சென்னைக்கு வந்து தொடங்கி வைத்தார். அப்போது பிரதிக்ஷா என்ற சினிமாவை எடுத்தேன். அப்படி 1995ஆம் ஆண்டு வரை எத்தனை படங்கள் எடுத்தேன். அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைத்தது.
அப்படி 1995ஆம் ஆண்டு ’பெத்தராயுடு’ என்ற தெலுங்கு படம் தயாரிச்சேன். அந்தப்படம் அதே வருடம் ஜூன் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. என்னுடைய பல படங்களில் பெத்தராயுடு சினிமா செய்த கலெக்ஷன் வேறு எந்தப் படங்களிலும் இல்லை.. இல்லை.. இல்லை.. இது தான் உண்மை. முதல் பிரிவியூ ஷோ கூட, எங்கள் அண்ணன் என்.டி.ஆருக்குப் போட்டு காட்டினேன். அதைப் பார்த்துட்டு இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகும்ன்னு சொன்னார். இந்தப் படம் நாட்டாமை என்று தமிழில் வெளிவந்தது.
ரஜினி ஏற்படுத்தி தந்த நல்ல வாய்ப்பு:
தமிழில் நாட்டாமை படத்தைப் பார்த்துட்டு தன்னை தனது வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டான், ரஜினி. நாட்டாமை படம் இங்கு ஹிட்டாயிருச்சு. அதை முதலில் பாரு. அது பிடிச்சிருந்தது என்றால் ரைட்ஸ் வாங்குறதுக்கு நான் உனக்கு சொல்றேன்னு சொல்றான். நானும் படத்தைப் பார்த்துட்டு ரொம்ப நல்லாயிருக்குடான்னு சொல்றேன். பிறகு படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் ரைட்ஸ் எனக்காக வாங்குறதுக்காக பேசுகிறார். பின், நான் ஆர்.பி.செளத்ரியிடம்பேசும்போது, ரஜினிகாந்த் சொன்னதால், உங்களுக்காக குறைச்சு தரேன்னு ஒரு ரேட்டுக்கு நாட்டாமை பட ரைட்ஸை கொடுக்குறாங்க.
பிறகு, டைரக்டர் ரவி ராஜாவை அழைத்து படம் பார்க்கச்சொல்லும்போது, அண்ணா எனக்கு கொஞ்சம் டவுட்டாக இருக்கு ஒருநாள் டைம் கொடுங்கன்னு சொல்றார். எனக்கு கோபம் வந்திருச்சு, நான் பார்த்திட்டேன்;
ரஜினிகாந்த் பார்த்திட்டார் இப்படி சொல்றாரேன்னு. அடுத்த நாள் ரவி ராஜா பெத்தராயுடு படத்தை டைரக்ஷன் செய்யிறேன்னு சொல்லிட்டார். அடுத்து அப்பா கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கோம். அப்போது ரஜினி என்கிட்ட பேசுறார், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்னு சொல்றார். நான் ஏன் உனக்கு இந்தப் படத்தை சொன்னேன் என்றால், அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கத்தான் என்றார். உடனே, நான் இருந்துகிட்டு, அது கெஸ்ட் வேஷம், மேலும் எனக்கு நீ எப்படி அப்பாவாக வேஷம்போடமுடியும்ன்னு கேட்கிறேன். இல்லை நான் செய்யிறேன்னு சொல்றான். அதை டைரக்டர் ரவிராஜாகிட்ட சொல்லும்போது ஆச்சரியப்பட்டுட்டார்.
பெத்தராயுடு என்கிற டைட்டிலை வைத்த ரஜினி:
அடுத்த நாள் ரஜினி அப்பா வேஷத்தில் சொந்த செலவில் போட்டோ ஷீட் செய்து, போட்டோ அனுப்பியிருக்கிறார். இவ்வளவு சின்ஸியரான ஆளே நான் பார்த்ததே இல்லைன்னு எனக்கு ஆச்சரியம்.
அடுத்து பெத்தராயுடு அப்படிங்கிற டைட்டிலை வைன்னு சொல்றார், ரஜினி. உடனே, நான் அதுக்கு முன்னாடி அப்படி டைட்டில் வைச்சு படம் ஓடலைன்னு சொல்றேன். உடனே, இல்லை வைன்னு சொல்றார். சரின்னு வைச்சாச்சு.
ராஜமுந்திரியில் படம் எடுத்தோம். படத்துக்கு அந்த ஊர்க்காரங்க நிறைய ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி என்னோட இரண்டு படங்கள் தோல்வி. அப்போது கொஞ்சம் பணக்கஷ்டத்தில் இருக்கேன். சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு ட்ரெயினில் வருகிறார், ரஜினி. அப்போது ஒரு பையில் 45 லட்சம் எடுத்திட்டு வந்து கொடுக்கிறார், ரஜினி. எனக்குத்தெரியும் நீ கஷ்டத்தில் இருக்கேன்னு, படம் ஜெயிச்சதுக்கப்புறம் கொடுன்னு கொடுக்கிறார், ரஜினி. என்ன மனுஷன். எப்படிப்பட்ட நண்பன். சினிமா ரிலீஸ் ஆகி, சென்ஷேஷனல் ஹிட் ஆகிடுச்சு. கணவன் - மனைவி எப்படி இருக்கணும். அண்ணன் தம்பி எப்படி இருக்கணும் அப்படின்னு சொன்ன படம். இனி அப்படி ஒரு படம் எடுக்கமுடியாது’’ என முடித்தார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு.
நன்றி: டெய்லி கல்ச்சர் யூட்யூப் சேனல்,