சிறுவனை ஒரு சினிமாக்காரரும் போய் விசாரிக்கல.. ஜெயிலுக்குப்போனவரை விசாரிக்குறீங்க.. அல்லு அர்ஜூனை வறுத்த தெலங்கானா சி.எம்
Dec 21, 2024, 08:18 PM IST
சிறுவனை ஒரு சினிமாக்காரரும் போய் விசாரிக்கல.. ஜெயிலுக்குப்போனவரை விசாரிக்குறீங்க.. அல்லு அர்ஜூனை வறுத்த தெலங்கானா சி.எம் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
புஷ்பா 2 திரைப்படத்தின்போது, தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் கடுமையாக அல்லு அர்ஜூனை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் இனிமேல், தெலங்கானாவில் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறினார். திரையுலகால் ஒரு உயிர் போய்விட்டதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை திரையுலகிற்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் கூறினார்.
அல்லு அர்ஜுன் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்து டோலிவுட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடந்தது என்ன?:
உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மூளைச்சாவு அடைந்தார். தற்போது வென்டிலேட்டரில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்தச் சம்பவம் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பதிலளித்துள்ளார்.
’ஒருவர்கூட பார்க்கப் போகவில்லை’: தெலங்கானா முதலமைச்சர்
இதுதொடர்பாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ‘’ சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர்.
ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
’அனுமதி இல்லாமலேயே’ - ரேவந்த் ரெட்டி
சந்தியா தியேட்டருக்கு வர போலீசார் அனுமதி மறுத்த பிறகும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததாகவும், அவரது கார் தெருவின் மத்தியில் இருந்து அசைந்ததால் ஏராளமான ரசிகர்கள் தியேட்டரை நோக்கி வந்ததாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா சட்டப்பேரவையில் பேசினார்.
மேலும், நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால், தியேட்டரை விட்டு வெளியேறுமாறு போலீசார் கூறியதை அல்லு அர்ஜுன் கேட்கவில்லை என்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
அப்போது அல்லு அர்ஜுன் கைது செய்யப்படுவார் என எச்சரித்த பின்னும், காரின் கூரையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டே கைகளை அசைத்தபடி அல்லு அர்ஜூன் சென்றதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
’உயிரை இழந்தால்..’: ரேவந்த் ரெட்டி
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு அரசாங்கம் குற்றம் சாட்டப்படுவதாகவும், மோசமான மொழியில் கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‘’நீங்கள் சினிமா சம்பாதித்து வியாபாரம் செய்யலாம், திரைப்படம் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அது மக்களின் உயிரைப் பறிக்க வழிவகுத்தால், நான் இந்த முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்.
நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த ஒரு சலுகை நிகழ்ச்சியையும் டிக்கெட் விலை உயர்வையும் அனுமதிக்க மாட்டேன்.
ஆனால், திரையுலகத்தால் மக்கள் உயிரிழந்ததை அரசு புறக்கணிக்காது''எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.25 லட்சம்:
இந்நிலையில் சந்தியா தியேட்டர் நெருக்கடி விபத்து சம்பவத்தில், ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவன் தேஜின் உடல் நிலையை விசாரிக்க தெலங்கானா அமைச்சர் கோமடிரெட்டி கிம்ஸ் மருத்துவமானிக்கு வருகை தந்தார்.
அப்போதுபேசிய அவர், ‘’ ஸ்ரீதேஜின் மருத்துவ செலவை அரசே ஏற்கும். ஸ்ரீதேஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும்’’ என்று தெலங்கானா அமைச்சர் கோமடிரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.