தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நகுல் கம்பேக் கொடுத்த மூவி முதல் வடிவேலுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

நகுல் கம்பேக் கொடுத்த மூவி முதல் வடிவேலுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

Divya Sekar HT Tamil

Sep 26, 2024, 12:59 PM IST

google News
Tamil Movies Released on Sep 26 : விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா, மெட்ராஸ், காதலில் விழுந்தேன் என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil Movies Released on Sep 26 : விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா, மெட்ராஸ், காதலில் விழுந்தேன் என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Tamil Movies Released on Sep 26 : விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா, மெட்ராஸ், காதலில் விழுந்தேன் என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஜீவா (Jeeva)

கடந்த 2014 ஆம் வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் ஜீவா. விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா, ஜி மாரிமுத்து, சார்லீ உள்ளிட்டவர்கள் நடித்து டி. இமான் இசையமைத்திருந்தார். வெண்ணிலா கபடி குழுவின் பதாகையின் கீழ் ஒளிப்பதிவாளர் ஆர். மதி மற்றும் கலை இயக்குனர் ராஜீவனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் விஷ்ணு மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ளனர் , சூரி மற்றும் லக்ஷ்மண் நாராயண் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்று கனவு காணும் இளம் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரரைப் பற்றிய படம் இது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்தது.

மெட்ராஸ் ( Madras)

2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் திரைப்படம் மெட்ராஸ். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.

காதலில் விழுந்தேன் ( Kadhalil Vizhunthen)

2008 செப்டம்பர் மாதம் காதலில் விழுந்தேன் திரைப்படம்வெளியானது. நகுல் ஹீரோ. சுனைனா ஹீரோயின். பி.வி.பிரசாத் படத்தை இயக்கியிருந்தார். இசை விஜய் ஆண்டனி. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட். நகுல் நடிப்பில் இப்படத்தில் அட்டகாசமாக இருக்கும்.

சக்கரகட்டி(Sakkarakatti)

சக்கரகட்டி திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இது காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது கலா பிரபு எழுதி இயக்கியது மற்றும் அவரது தந்தை கலைப்புலி எஸ். தானுவால் தயாரிக்கப்பட்டது. இதில் அறிமுக நடிகர் சாந்தனு பாக்யராஜ் , மூத்த நடிகர்-இயக்குனர் K. பாக்யராஜின் மகன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இஷிதா சர்மா மற்றும் வேதிகா ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒலிப்பதிவு இடம்பெற்றது. சக்கரகட்டி 26 செப்டம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.

கலாட்டா கணபதி (Galatta Ganapathy)

கலாட்டா கணபதி 2003 இல் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். கார்த்திக் குமார் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாண்டியராஜன் மற்றும் சங்கவி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, வினு சக்ரவர்த்தி, வடிவுக்கரசி, சிட்டி பாபு, சேது வினாயகம், கீர்த்தனா, பாண்டு மற்றும் மகாநதி சங்கர் போன்றோரும் நடித்திருந்தனர். ஆர். ராதாகிருஷ்ணன் இதை தயாரித்திருந்தார். சௌந்தர்யன் இசையமைத்த இத்திரைபடம் 2003 செப்டம்பர் 26 அன்று வெளிவந்தது.

கையோடு காய் (Kaiyodu Kai)

கையோடு காய் திரைப்படம் என்பது ராஜன் சர்மா இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படமாகும். இப்படத்தில் அரவிந்த் ஆகாஷ் , யுகேந்திரன் மற்றும் புதுமுகம் சோனா, ரகுவரன் , மலேசியா வாசுதேவன் , தலைவாசல் விஜய் , கருணாஸ் , எம்.என்.ராஜம் , பசி சத்யா, சாந்தி வில்லியம்ஸ் மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

த்ரீ ரோஸஸ் (Three Roses)

90 'ஸ் களின் கனவு கன்னியாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகை ரம்பாவின் சொந்த தயாரிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரீ ரோஸஸ். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படத்தில் ரம்பா, ஜோதிகா மற்றும் லைலா மூவரும் நெருங்கிய தோழிகள். ஒரு சிக்கலில் மாட்டி கொண்டு பின்னர் அதில் இருந்து எப்படி மீளுகிறார்கள் என்பது படத்தின் கதை.

வின்னர் (Winner)

சுந்தர். சி எழுதி இயக்கிய ஒரு காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் வின்னர். சுதன் S ராமச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஹீரோவாக பிரஷாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, எம்.என். நம்பியார், விஜயகுமார், ரியாஸ் கான், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். கட்டதுரை கதாபாத்திரமாக அவர் இப்படத்தில் செய்த காமெடி இன்றும் மீம்ஸ்களாக பயன்படுகிறது.

பத்தினி (Paththini)

பத்தினி என்பது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும், இது பி. வாசு எழுதி இயக்கியது. இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பு நடித்துள்ளனர் , பிரகாஷ் ராஜ் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது 26 செப்டம்பர் 1997 அன்று வெளியிடப்பட்டது.

அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)

அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதாநாயகனாக படத்தின் இயக்குநரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை