தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mgr: ‘எனக்கா படம் எடுத்திருக்கீங்க?’ அன்பே வா பார்த்துவிட்டு அப்செட் ஆன எம்.ஜி.ஆர்.. அதன் பின் நடந்தது என்ன?

MGR: ‘எனக்கா படம் எடுத்திருக்கீங்க?’ அன்பே வா பார்த்துவிட்டு அப்செட் ஆன எம்.ஜி.ஆர்.. அதன் பின் நடந்தது என்ன?

Jun 24, 2024 10:08 AM IST Stalin Navaneethakrishnan
Jun 24, 2024 10:08 AM , IST

  • MGR In Anbe Vaa: எம்ஜிஆர்-சரோஜா தேவி நடித்த அன்பே வா திரைப்படம் பெரிய ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன், படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்.,க்கு படம் பிடிக்கவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? படத்தை பார்த்து எம்.ஜி.ஆர்., சொன்னது என்ன தெரியுமா?

1966 ம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே வா. ஈஸ்ட்மென்ட் கலரில் சக்கை போடு போட்ட இந்த திரைப்படம், படத்தின் கதாநாயகனான எம்.ஜி.ஆர்.,க்கு அவ்வளவு திருப்தியை தரவில்லை என்பது தெரியுமா? ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம், எம்.ஜி.ஆர்.,க்கு ஏன் பிடிக்காமல் போனது? படம் ரிலீஸ் ஆவதற்கு முன், எம்.ஜி.ஆர்., சொன்ன வார்த்தைகள் என்ன? 

(1 / 6)

ஏவிஎம் நிறவனம் தயாரித்த இத்திரைப்படத்தை திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து முதல் பிரதி வந்ததும், எம்.ஜி.ஆர்.,க்கு படத்தை திரையிட முடிவு செய்தது ஏவிஎம். அவருக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது அன்பே வா. தன் நண்பர்கள் மூன்று பேருடன் எம்.ஜி.ஆர்., மட்டும் அன்பே வா படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். படம் முடிகிறது. இப்போது எம்.ஜி.ஆர்., வெளியே வருகிறார் .

(2 / 6)

எம்.ஜி.ஆர்., வருகைக்காகவும், அவர் என்ன சொன்ன போகிறார் என்பதற்காகவும் வெளியே காத்திருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தார். அவர்கள் ஏற்கனவே படத்தை பார்த்திருந்தார்கள். இப்போது வெளியே வரும் எம்.ஜி.ஆர்., முகத்தில் மகிழ்ச்சியில்லை. அதை ஏவிஎம் நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர்., என்ன சொல்லப்போகிறார் என்று பதட்டமாகிறார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்த எம்.ஜி.ஆர்., இப்போது பேச தொடங்குகிறார்.

(3 / 6)

எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். இது என்னுடைய படம் இல்லை. க்ளைமாக்ஸ் கட்சிகள் எனக்கான பாடமாக இல்லை. என் ரசிகர்களுக்கு இது எந்த அளவிற்கு பிடிக்கும் என்று தெரியவில்லை என்று எம்.ஜி.ஆர்., கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். ஏவிஎம் நிறுவனத்தினருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. படம் முறைப்படி ரிலீஸ் செய்யப்படுகிறது. முதல் நாள் ஷோவில் தியேட்டரின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆட்களை ரசிகர்களுடன் அமர வைக்கிறது ஏவிஎம். 

(4 / 6)

முதல் காட்சி முடிகிறது. ரசிகர்களுக்கு படம் அவ்வளவு திருப்தி இல்லை என்கிற ரிப்போட் வருகிறது. எம்.ஜி,ஆர்., சொன்னது தான் நடந்தது. அதே நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருந்தவர்கள் படத்தை கொண்டாடியுள்ளனர். குடும்பங்களுக்கு படம் பிடித்துவிட்டதை அறிகிறது ஏவிஎம். அவ்வளவு தான், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்றது ஏவிஎம்.

(5 / 6)

ஒரு படத்தின் வெற்றியை கணிக்க தவறிவிட்டாரா எம்ஜிஆர்? என்கிற கேள்வி எழலாம்! உண்மையில் எம்ஜிஆர்., கணித்தது வெற்றி, தோல்வியை அல்ல! தன் ரசிகர்களுக்கு படம் பிடிக்காது என்பதை தான் கணித்தார். அது நடந்தது. அதே நேரத்தில் அன்பே வா.. ரசிகர்களை கடந்து அனைவரும் விரும்பும் படமாக மெகா ஹிட் ஆனது. இன்றும் எம்ஜிஆர்., ஹிட் வரிசையில் அன்பே வா திரைப்படத்திற்கு முதன்மை இடம் உண்டு.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்