தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேணும்.. அதனால்தான் அவர் ரஜினி..” வசூலே இல்லையா யாரு சொன்னா? - ஞானவேல் பதிலடி!

“அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேணும்.. அதனால்தான் அவர் ரஜினி..” வசூலே இல்லையா யாரு சொன்னா? - ஞானவேல் பதிலடி!

Oct 20, 2024, 05:56 PM IST

google News
மழை குறுக்கீடு செய்ததால் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அந்தப்படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா பதில் கொடுத்திருக்கிறார்.
மழை குறுக்கீடு செய்ததால் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அந்தப்படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா பதில் கொடுத்திருக்கிறார்.

மழை குறுக்கீடு செய்ததால் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அந்தப்படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா பதில் கொடுத்திருக்கிறார்.

‘வேட்டையன்’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்த நிலையில், நிகழ்வில் அந்தப்படத்தின் இயக்குநர் ஞானவேல்  கலந்து கொண்டு பேசினார்

அவர் பேசும் போது, “ நம்பிக்கையில் இருந்துதான் இது தொடங்கியது. நன்றி அறிவித்தலோடுதான் இது முடிய வேண்டும். கன்டென்ட் சார்ந்து ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று ஈடுபாட்டோடு, எனக்கு இந்த வாய்ப்பைக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்பயணம், இவ்வளவு பெரிய நட்சத்திரப்பட்டாளம் எனக்கு கிடைத்திருக்காது.

வேட்டையன் பூஜையின் போது எடுத்தப்படம்

கட்ஸ் வேண்டும்

ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின்னர் கன்டென்ட் சார்ந்து படம் செய்வதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அந்த கட்ஸ் இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரிடம் கதை சொல்லும் போதே, ஜெயிலர் வெற்றி எனக்கு அழுத்தத்தை கொடுக்கக்கூடாது, எனக்கான கதையை நான் செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். மேலும், இந்தக்கதையை வேறு யாரை வைத்து என்னால் எடுக்க முடியும். ஆனால், இதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வந்தேன் என்றேன்.

சப்போர்ட் அளப்பறியது.

அந்த இடத்தில் ஆரம்பித்து, இந்தப்படம் முடிகிற வரைக்கும் அவர் எனக்கு கொடுத்த சப்போர்ட் அளப்பறியது. இந்தப்படத்தில் நடித்த எல்லோரும் கதையை நம்பி வந்தார்கள். இந்தப்படப்பை படைப்பதற்கு எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. மழை குறுக்கீடு செய்தாலும், திரைப்படத்திற்கு வரும் பார்வையாளர்களின் வரத்து குறையவில்லை.

ரஜினி உடன் ஞானவேல் ராஜா

இது உண்மையிலேயே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியிருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அந்தப்பெயரைக் கேட்டாலே பயம் வரும். நேற்று திரையரங்களுக்குச் சென்று படத்தை பார்த்தோம். குழந்தைகள் உட்பட பலரும் திரையரங்கிற்கு வந்திருந்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று பேசினார்.

முன்னதாக, ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தைப் பிடித்தவர் த.செ. ஞானவேல். இவர் நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி, துஷாரா விஜயன் என பல நடிகர்களை வைத்து வேட்டையன் என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த அக்டோபர் 10ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியானது.

வேட்டையன் வசூல்

நீட் தேர்வை மையப்படுத்தி, கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் என்கவுண்டர் குறித்தும் கதை இருந்தது. நல்ல கதைக் களத்தைக் கொண்ட இந்தப் படம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் வசூலில் அடிவாங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஞானவேல் பேசி இருக்கிறார்.

கதையின் கரு என்ன?

கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.

அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.

அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!

ரஜினி நடிப்பு எப்படி?

என் கவுண்டர் அதியனாக நடை, உடை, பாவனையில் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் அதிரடி காட்டினாலும், போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் காட்டிய நிதானம், நடிகன் ரஜினியை முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

நீதியின் பக்கம் நிற்கும் நீதிபதியாக அமிதாப், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்திருக்கிறார். ஆசிரியர் சரண்யாவின் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் காட்டிய அப்பாவித்தனமும், நேர்மையும் ஆச்சரியப்பட வைத்தது. ரஜினி உடனேயே ஜாலியாக, புத்திசாலியாக பயணிக்கும் பேட்டரி கதாபாத்திரத்தில் பகத் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு கேரண்டி.

மஞ்சு வாரியரின் என்கவுண்டருக்கு எதிரான மனப்பான்மை நேர்மையான மனைவிக்காக அடையாளம். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் காட்டியிருக்கும் மிடுக்கு, அவருக்கு எடுப்பாக இருந்தது. குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டது என்றாலும், ராணா முடிந்த வரை ஸ்கோர் செய்திருக்கிறார். அபிராமியின் கதாபாத்திரம் எடுபடவில்லை.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி