SIIMA 2024: சபாஷ் சரியான போட்டி.. ஜெயிலர் முதல் தசரா வரை.. சைமா விருதுகளில் முன்னணியில் இருக்கும் படங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siima 2024: சபாஷ் சரியான போட்டி.. ஜெயிலர் முதல் தசரா வரை.. சைமா விருதுகளில் முன்னணியில் இருக்கும் படங்கள் என்னென்ன?

SIIMA 2024: சபாஷ் சரியான போட்டி.. ஜெயிலர் முதல் தசரா வரை.. சைமா விருதுகளில் முன்னணியில் இருக்கும் படங்கள் என்னென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jul 16, 2024 05:03 PM IST

SIIMA 2024: ஜெயிலர் முதல் தசரா வரை… சைமா 2024 -விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி இருக்கிறது. எந்தெந்த திரைப்படங்கள் முன்னணியில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

SIIMA 2024:  சபாஷ் சரியான போட்டி.. ஜெயிலர் முதல் தசரா வரை.. சைமா விருதுகளில் முன்னணியில் இருக்கும் படங்கள் என்னென்ன?
SIIMA 2024: சபாஷ் சரியான போட்டி.. ஜெயிலர் முதல் தசரா வரை.. சைமா விருதுகளில் முன்னணியில் இருக்கும் படங்கள் என்னென்ன?

அந்த வகையில், பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) - தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.

ஒன்று கூடும் நட்சத்திரங்கள்

தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில், விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை, சைமா 2024 - SIIMA 2024 தற்போது வெளியிட்டுள்ளது.‌

இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், '' 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம்.. கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்- மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் தேசிய அளவிலான பிரமாண்டமான வெற்றிப்படங்களை உருவாக்கி இருக்கின்றனர். இதன் காரணமாக சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மிகவும் பலமான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்'' என்றார்.

எந்தெந்த படங்கள் முன்னணி வரிசையில் இருக்கிறது?

சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில், தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.

தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா'- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது. அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான 'ஹாய் நன்னா' திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கன்னடம் மற்றும் மலையாள படங்களும் பட்டியலில்….

கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான 'காட்டேரா' எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த 'சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ 'திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் - ஆசிப் அலி நடித்த '2018' எனும் திரைப்படம், எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல்- தி கோர் ' எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.