தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டையன் 10ஆவது நாள் வசூல்.. இறங்கி சட்டென ஏறிய பாக்ஸ் ஆபிஸ்.. நின்று ஆடும் ரஜினியின் மவுசு!

வேட்டையன் 10ஆவது நாள் வசூல்.. இறங்கி சட்டென ஏறிய பாக்ஸ் ஆபிஸ்.. நின்று ஆடும் ரஜினியின் மவுசு!

Marimuthu M HT Tamil

Oct 20, 2024, 10:33 AM IST

google News
வேட்டையன் 10ஆவது நாள் வசூல்.. இறங்கி சட்டென ஏறிய பாக்ஸ் ஆபிஸ்.. நின்று ஆடும் ரஜினியின் மவுசு குறித்து பார்ப்போம்.
வேட்டையன் 10ஆவது நாள் வசூல்.. இறங்கி சட்டென ஏறிய பாக்ஸ் ஆபிஸ்.. நின்று ஆடும் ரஜினியின் மவுசு குறித்து பார்ப்போம்.

வேட்டையன் 10ஆவது நாள் வசூல்.. இறங்கி சட்டென ஏறிய பாக்ஸ் ஆபிஸ்.. நின்று ஆடும் ரஜினியின் மவுசு குறித்து பார்ப்போம்.

வேட்டையன் திரைப்படத்தின் 10ஆம் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மற்றும் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் 10ஆவது நாளில் இந்தியா முழுவதும் ரூ.4.25 கோடி நிகர வசூலை ஈட்டியது. இந்த எண்ணிக்கை 9ஆவது நாளில் வசூலாக இருந்த ரூ.2.6 கோடி வருவாயுடன் ஒப்பிடும்போது சுமார் 38 விழுக்காடு அதிகம் ஆகும்.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தசராவுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட கோலிவுட் திரைப்படம், வேட்டையன். இந்த திரைப்படம் கடந்த வார இறுதியில் பெரும் வருவாயைக் கண்டது. இது வெளியான பிறகு முதல் சனிக்கிழமையில் ரூ.26.75 கோடியும், ஞாயிற்றுக்கிழமையில் ரூ.22.3 கோடியும் நிகர வருவாயையும் ஈட்டியது. இதன்மூலம் வேட்டையன் திரைப்படம் 10 நாட்களில் ரூ.129 கோடியை இந்திய அளவில் வசூல் செய்துள்ளது.

வேட்டையன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸில் அதன் முதல் ஏழு நாட்களில் சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் ரூ.122.15 கோடியை வசூலித்தது. வேட்டையன் நிறுவனம் ரூ.300 கோடி வசூலை இலக்காகக் கொண்டிருந்தாலும், அது 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று தொழில்துறை டிராக்கர் இணையதளமான sacnilk தரவுகள் தெரிவிக்கின்றன.

வேட்டையன் பட ஆக்கிரமிப்பு

வேட்டையன் திரைப்படம் வருவாய் ரீதியிலான வசூல் மட்டுமின்றி, திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மொத்தத்தில் 26.60 விழுக்காடு திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் ஓடி வருகிறது.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியைவிட சென்னை திரையரங்குகளில், அதிகபட்சமாக 34 விழுக்காடு பார்வையாளர்களைப் பெற்று வேட்டையன் திரைப்படம் ஓடி வருகிறது.

இதற்கிடையில், கோவை மற்றும் திருச்சி நகர்களில் 30 சதவீதம் மற்றும் 36 சதவீதம் பார்வையாளர்களைப் பெற்று, முன்போடு ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது. மெட்ரோ நகரங்களைப் பற்றி பேசுகையில், டெல்லியில் 9.67 பார்வையாளர்கள் வேட்டையன் படம் பார்க்க வருகை தந்துள்ளனர். இது மும்பை போன்ற பிற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு ஆகும். ஏனெனில் மும்பையில் அனைத்து காட்சிகளிலும் சராசரியாக 16.50 சதவீத பார்வையாளர்கள் இருந்தனர்.

வேட்டையன் படம் எத்தகையது?

ஜெய் பீம் படத்தில் ஒரு சீரியசான சப்ஜெக்ட்டை கையாண்ட பிறகு இயக்குநர் டி.ஜே.ஞானவேல், வேட்டையனில் ஒரு வித்தியாசமான கதையினை கையில் எடுத்து இருக்கிறார்.

வேட்டையன் திரைப்படத்தில் கதைக்களம் ஒரு என்கவுன்ட்டர் நிபுணரை மையமாகக் கொண்டுள்ளது. அவர் ஒரு கல்வி மோசடியை விசாரிக்கத்தொடங்கும்போது தொடர்ச்சியான சோதனைகளுக்கு ஆளாகிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டையனில் இணைந்த அமிதாப் மற்றும் ரஜினி:

33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனை மீண்டும் பெரிய திரையில் ஒன்றிணைப்பதில் வேட்டையன் திரைப்படம் முக்கியப்பங்கு வகித்துள்ளது. வேட்டையன் படத்தின் முதல் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் கவனத்தை ஈர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வேட்டையன் படம் விரைவில், ஒரு வேகமான புலனாய்வு த்ரில்லராக மாறுகிறது.

ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் இணைந்து கடைசியாக 1991ஆம் ஆண்டு இந்தியில் வெளியான அதிரடி படமான ’ஹம் இல்’ சேர்ந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(சோர்ஸ்: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் Sacnilk இணையதளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன)

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி