தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya44: 2 வருடமாக நடக்கு டிஸ்கஷன்.. ‘சூர்யா 44’ ரகசியத்தை பொத்தி பொத்தி பாதுகாத்தது ஏன்?

Suriya44: 2 வருடமாக நடக்கு டிஸ்கஷன்.. ‘சூர்யா 44’ ரகசியத்தை பொத்தி பொத்தி பாதுகாத்தது ஏன்?

Mar 31, 2024, 05:21 PM IST

google News
இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது.
இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது.

இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது.

நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. 

“ இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்த பதிவில், “ நான் என்னுடைய அடுத்தப்படத்தில், எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன் சாருடன் இணைய இருக்கிறேன்” பதிவிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

காரணம், சூரரைப்போற்று திரைப்பட வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆன நடிகர் சூர்யா, அந்தப்படம் கால தாமதம் ஆகும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்  அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

காரணம், விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை இரண்டாம் பாகத்தை முடித்த பின்னர், வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறி இருந்தார். இதற்கிடையே சூர்யா 44 தொடர்பான அறிவிப்பு வந்த காரணத்தால், அந்தப்படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது சூர்யா 44 படம் குறித்தான சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப்படம் குறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் பிரபல இணையதளமான விகடன், சூர்யா 44 திரைப்படம் சூர்யாவிற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, “ இந்தக்கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம். 

இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி