தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Marimuthu M HT Tamil

May 19, 2024, 05:35 PM IST

google News
Sobhita Dhulipala: சோபிதா துலிபாலா தங்க நிற ஃபுல் ஸ்லீவ் ஆடையில் கேன்ஸ் விழாவில் ஜொலித்தார்.
Sobhita Dhulipala: சோபிதா துலிபாலா தங்க நிற ஃபுல் ஸ்லீவ் ஆடையில் கேன்ஸ் விழாவில் ஜொலித்தார்.

Sobhita Dhulipala: சோபிதா துலிபாலா தங்க நிற ஃபுல் ஸ்லீவ் ஆடையில் கேன்ஸ் விழாவில் ஜொலித்தார்.

Sobhita Dhulipala: 77ஆவது ’கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை சோபிதா துலிபாலா, தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில், சோபிதா துலிபாலா தனது ரசிகர்களுக்கு, திரைப்பட விழாவிற்குச் சென்றபோது அணிந்திருந்த தனது ஆடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து படங்களை வெளியிட்டார். 

கேன்ஸ் நிகழ்ச்சியின்போது சோபிதா அணிந்தவை:

சோபிதா தங்க நிற முழுக்கை உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். அதில் சோபிதா, நீண்ட காதணிகளை அணிந்திருந்தாள். தலைமுடியை கொண்டையாகக் கட்டி, ஹீல்ஸ் அணிந்திருந்தார். கேன்ஸில் நடந்த ஒரு பகல்நேர நிகழ்வுக்கு சோபிதா துலிபாலா, இதை அணிந்திருந்தார்.

சோபிதாவின் கேன்ஸ் தோற்றத்திற்கு ரசிகர்கள் அடித்த கமெண்ட்டுகள்:

தனது இன்ஸ்டாகிராமில் கலக்கலான படங்களைப் பகிர்ந்த நடிகை சோபிதா, "கேன்ஸில் உள்ள லவுஞ்சில் ஒரு தங்க டிராகன் போல சுற்றித் திரிந்தபோது" எனத் தலைப்பிட்டு, படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்குப் பதிலளித்த ரசிகர் ஒருவர், "நீங்கள் வாவ் என்று சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். 

இன்னொரு ரசிகர் ஒருவர், ‘’சோபிதா துலிபாலா மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். அவளின் ஒவ்வொரு கோணமும் கவர்ச்சியாக இருக்கிறது" என்று ஒரு கருத்து பதிவுசெய்திருந்தார்.

மற்றொரு ரசிகர், "அய்யோ... கோல்டி அழகில் திகைக்க வைக்கிறாள். நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கியவர் போல் இருக்கிறீர்கள்" என்றார்.

இன்னொரு ரசிகர், "உங்கள் கண்களை காதலிக்கிறேன். வாவ்" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதினார். மேலும், "ரொம்ப அழகா இருக்கு. நீங்கள் ஒவ்வொரு ஆடையையும் ராக் செய்கிறீர்கள்" என்று மற்றொரு ரசிகர் எழுதியுள்ளார். 

சோபிதா இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் முதன்முறையாகத் தோன்றினார்.  சோபிதா மே 17ல் நடந்த நிகழ்வில் பளபளப்பான ஊதா நிற ஆடை மற்றும் ஹீல்ஸ் அணிந்திருந்தார். மேலும் ஃப்ரீ ஹேர் விட்டிருந்தார்.  சோபிதா துலிபாலா அணிந்திருந்த  ஆடை ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள கோர்டெலியா ஜம்ப்சூட்டை நம்ரதா ஜோஷிபுரா வடிவமைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரீமியம் ஐஸ்கிரீம் பிராண்டான மேக்னம், இந்தியாவை சோபிதா பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா:

ஆண்டுதோறும் பிரபலங்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் சினிமாவைக் கொண்டாட ’பாலைஸ் டெஸ் ஃபெஸ்டிவல்ஸ் எட் டெஸ் காங்கிரஸ்’ என்னும் மையத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கேன்ஸ் திரைப்பட விழாவில் எப்போதும் கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா ராய் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிதி ராவ் ஹைதாரியும் கலந்து கொள்வார்.

லிய சியடொஸ், வின்சென்ட் லிண்டன், லூயிஸ் கேரல் மற்றும் ரபேல் குயினர்ட் நடித்த குயின்டின் டுபிஎக்ஸ்ஸின், The Second Act உலக அரங்கேற்றத்துடன் கேன்ஸ் திரைப்பட விழா, மே 14 இரவு தொடங்கியது. 

தொடக்க விழாவில், ஆஸ்கர் விருது வென்ற ’மெரில் ஸ்ட்ரீப்’ கௌரவ பாம் டி'ஓர் விருதைப் பெற்றார். இந்த திரைப்பட விழா மே 25-ம் தேதி நிறைவடைகிறது.

சோபிதாவின் வருங்கால திரைப்படம்:

சோபிதா தற்போது தேவ் படேல் இயக்கிய ’மங்கி மேன்’ என்னும் இந்தி படத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்புப் பலரால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதில் தேவ், சிக்கந்தர் கெர், ஷார்ல்டோ கோப்லி, மகரந்த் தேஷ்பாண்டே, அஸ்வினி கல்சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சோபிதாவின் ரகசியக் காதல்:

சோபிதா நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்வதாக கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், சமந்தாவின் காதல் முறிவுக்குப் பின், சோபிதா துலிபாலா, நாகசைதன்யாவின் காயத்துக்கு மருந்துபோடுவதாக கூறப்படுகிறது. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட சோபிதாவுடன் நாகசைதன்யா இருந்தார் எனக் கூறப்படுகிறது. 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி